தமிழகம், கேரளா மற்றும் அமெரிக்காவில் அவியல்


Posted by-Kalki Teamகுறும் படங்கள் மூலம் வணிக ரீதியான ஆதாயங்களை சினிமா அடைந்தே தீர வேண்டும் என்பதை ஒரு சபதமாகவே எடுத்துவிட்டார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.

பீட்சா, ஜிகர்தண்டா படங்களுக்குப் பின் இறைவி படத்தை முடித்து அதை வெளியிடும் வேலையில் பிஸியாக இருக்கும்ல அவர், இப்போது இன்னொரு பக்கம் அவியல் என்று குறும்படத் தொகுப்பு ஒன்றையும் வெளியிடுகிறார்.

தனது ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் 6 குறும்படங்களைத் தொகுத்து முன்பு பெஞ்ச் டாக்கீஸ் என்ற குறும்படத் தொகுப்பை வெளியிட்டார். அடுத்த முயற்சி இந்த அவியல்.

இது பெஞ்ச் டாக்கீஸின் இரண்டாம் பாகம் என்கிறார் கார்த்திக். அவியல், மக்களின் ரசனையை கவரும் விதத்தில் படைக்கப்பட்ட ஐந்து நகைச்சுவையான, ஜனரஞ்சகமான கதைகளின் கலவையாகும்.

இந்த படத்தில் நான்கு புதிய இயக்குனர்கள் - ஷம்மீர் சுல்தான், மோஹித் மெஹ்ரா, லோக்கேஷ் கனகராஜ், குரு ஸ்மாரன், மற்றும் ப்ரேமம், நேரம் போன்ற வெற்றித் திரைப்பங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரனின் கதைகளும் இடம் பெறுகின்றன.

பாஹுபலி, காஞ்சனா 2, மாயா, அரண்மனை, டீ மாண்டி காலனி, பிசாசு என பல மாபெரும் வெற்றி படங்களை வெளியிட்டு வெற்றி பெற செய்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், அவியல் திரைப்படத்தை தமிழ் நாடு முழுவதும் மார்ச் 11 ஆம் தேதி வெளியிடுகிறார்கள்.

அவியல், கேரளா மற்றும் அமெரிக்காவிலும் அன்றே வெளியாகிறது.

இதுகுறித்து கார்த்திக் சுப்பராஜ் கூறுகையில், "திறமை வாய்ந்த நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை அறிமுக படுத்துவதில் பெரும் முனைப்பு காட்டி வருகிறது, ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம். அவ்வகையில், அவியல் திரைப்படத்தில், இளம் முன்னணி கதாநாயகர்கள் பாபி சிம்ஹா, நிவின் பாலி மற்றும் வளர்ந்து வரும் இளம் நட்சதங்களான தீபக் பரமேஷ், அர்ஜூனன், ஷரத் குமார் உட்பட புதுமுகங்களான அம்ருதா ஸ்ரீனிவாசன், ரோஹித் மற்றும் மோசஸ் ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை அமைத்தவர்கள், விஷால் சந்திரசேகர் (ஜில் ஜங் ஐக்), ராஜேஷ் முருகேசன் (ப்ரேமம் & நேரம்), ஜாவேத் ரியாஸ் மற்றும் ஷமீர் சுல்தான். அவியல் படத்திற்கான சிறப்பு தலைப்பு பாடலை இசையமைத்திருக்கிறார், ரகு தீக்ஷித் மற்றும் அதனை பாடி இருக்கிறார் பிரபலபாடகர் அந்தோணி தாசன்.

பெஞ்ச் டாக்கீஸ் இதை போன்று குறும்படங்களை வெள்ளித்திரையில் வெளியிட்டு, வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்கப்படுத்துவதை தொடர்ந்து செய்து வரும்.

இனி வரும் மாதங்களில் மேலும் பல படங்களை இதேபோல் வெளியிட்டு, இளம் தலைமுறையினருக்கு ஓர் அரிய பாதை அமைத்து தரும். அவியல் மாபெரும் வெற்றி அடைய உங்கள் பேராதரவை அன்புடன் வேண்டுகிறோம்," என்றார்.Post Comment

Post Comment