நெல் ஜெயராமன் உடலுக்கு ஸ்டாலின்-வாசன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி :


Posted by-Kalki Teamபுற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த நெல் ஜெயராமன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், தமாகா தலைவர் வாசன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் நெல் ஜெயராமன். அரிய வகை பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 50. அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நெல் ஜெயராமன் உடல் தேனாம்பேட்டை ரத்னா நகர் 2-ஆவது தெருவில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நெல் ஜெயராமனின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜி.கே.வாசன், பி.ஆர்.பாண்டியன், தமிழிசை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தேனாம்பேட்டையில் பகல் 11 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். அதன்பின்னர் நெல் ஜெயராமன் உடல் அவரது சொந்த ஊருக்கு வேன் மூலம் கொண்டு செல்லப்பட்டு நாளை மதியம் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

நெல் ஜெயராமன் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கான பயணச் செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளார். மகனின் கல்விச் செலவையும் ஏற்றுள்ளார்.


Post Comment

Post Comment