வறண்ட சருமத்திற்கு உருளைக்கிழங்கை எப்படி பயன்படுத்தலாம்?


Posted by-Kalki Teamஉருளை கிழங்கில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வறண்ட சருமத்தை பொலிவு பெற வைக்க எவ்வாறு உருளைக்கிழங்கை பயன்படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்.

முகத்தை அழகாக வைக்க பல்வேறு முறைகளிருந்தாலும், இயற்கை ரீதியான முறைகளே அதிக பலனை தரும். முகம் அழகாகவும் மென்மையாகவும், பளிச்சென்றும் இருக்க யார்தான் விரும்ப மாட்டார்கள். உருளை கிழங்கில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இது முகத்தை பட்டுபோல மாற்றும். வறண்ட சருமத்தை பொலிவு பெற வைக்க எவ்வாறு உருளைக்கிழங்கை பயன்படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்.

முகம் மிகவும் வறண்டு இருந்தால் கீறல்கள், சொரசொரப்புகள் ஏற்படும். இதனால் முக அழகே கெட்டு விடும். முகத்தை கீறல்கள் இல்லாமல் வைத்து கொள்ள இந்த குறிப்பு போதும். மேலும், இது முகத்தின் வறட்சியை முழுமையாக போக்கி விடும்.

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு

தயிர் 1 டீஸ்பூன்

செய்முறை :

முதலில், தயிரை நன்கு அடித்து கொள்ளவும். அடுத்து அவற்றுடன் உருளைக்கிழங்கை சாறாக்கி கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் பூசி 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பிறகு 20 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும். இந்த ஃபேசியல் முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முக வறட்சி நீங்கி விடும்.


Post Comment

Post Comment