அனந்த பத்பநாப சுவாமியின் மூலஸ்தானம் 560 கிமீ தாண்டி பேக்கலில் இருக்காம்!


Posted by-Kalki Teamகேரளாவின் புகழ்பெற்ற புனித ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் அனந்தபுரா கோயில், அனந்த பத்பநாப சுவாமியின் மூலஸ்தானமாக கருதப்படுகிறது. இந்தக் கோயிலின் ஏரியில் உள்ள முதலை கோயிலின் பாதுகாவலாக கருதப்படுவதோடு, பக்தர்களால் மிகவும் மரியாதைக்குரிய பிராணியாகவும் மதிக்கப்படுகிறது.

அதோடு இந்த முதலை இறந்து போனாலும், அதன் இடத்தில் கோயிலை பாதுகாக்க மற்றொரு முதலை இந்த ஏரிக்கு வரும் என்றும் நம்பப்படுகிறது. பேக்கல் நகரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அனந்தபுரா கோயில் 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதோடு பிராதான கோயிலை சுற்றி தலைவாயில் ஒன்றும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

நீலேஷ்வரம்

நீலேஷ்வரம் மகாராஜாக்களின் அரசாட்சி செயல்பட்டு வந்த இடமான நீலேஷ்வரம், பேக்கல் நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. நீலகண்ட மற்றும் ஈஸ்வர் ஆகிய இரு வார்த்தைகள் சேர்ந்து நீலேஷ்வரம் என்று அறியப்படுகிறது. இந்தப் பகுதி கேரளாவின் முக்கிய கலாச்சார மையமாக திகழ்ந்து வருகிறது. நீலேஷ்வரம் நகரில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற அரண்மனை தொல்பொருள் துறையினரின் நாட்டுப்புறவியல் மையமாக கருதப்படுகிறது.

இதுதவிர நீலேஷ்வரம் நகரம் கவுஸ் எனப்படும் பல்வேறு ஆலயங்களுக்க்காகவும் பிரபலம். இங்கு உள்ள யோகா மற்றும் கலாச்சார மையங்களில் மூலிகை குளியல், சேற்றுக் குளியல் போன்ற இயற்கை சிகிச்சைகளை மேற்கொள்வதில் பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலேஷ்வரம் நகரின் கிழக்கு எல்லையாக மேற்கு தொடர்ச்சி மலைகளும், மேற்கே லக்ஷ்வதீப்பும், வடக்கே காசர்கோடும், தெற்கு எல்லைகளாக வயநாடு மற்றும் கோழிக்கோடு நகரங்களும் அமைந்திருக்கின்றன. மேலும் நீலேஷ்வரம் நகரின் இயற்கை சூழலும், காயல் நீர்பரப்பின் வசீகரிக்கும் தோற்றமும் உங்களுக்கு மறக்க முடியாத சுற்றுப் பயண அனுபவமாக அமையும்.

ஹவுஸ்போட் குரூஸ்

பேக்கல் நகருக்கு சுற்றுலா வரும்போது நீங்கள் ஹவுஸ்போட் குரூஸ் எனப்படும் படகு இல்லத்தில் பனைமரங்கள் சூழ அமைந்திருக்கும் காயல் நீரில் உல்லாசமாக பயணம் செய்யும் அற்புதமான அனுபவத்தை தவற விட்டுவிடாதீர்கள். அதுமட்டுமல்லாமல் இந்த படகு இல்லமே உங்களுக்கு சொர்கத்தில் வசிப்பது போன்ற ஒரு அனுபவத்தை கொடுக்கும். இதன் காரணமாகவே சலிப்பும், அலுப்பும் மிகுந்த தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு சிறந்த நிவாரணமாக திகழும் இந்த படகு இல்லங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

அதிலும் குறிப்பாக தேன் நிலவை கொண்டாடுவதற்காக இந்த படகு இல்லங்களை தேடி வரும் புது மனத் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகம். மேலும் இந்த படகு இல்லங்கள் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருப்பதால் நீங்கள் குடும்பத்துடன் இங்கு வந்து உங்கள் விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிக்கலாம்.Post Comment

Post Comment