சருமம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் நீர் முத்திரை :


Posted by-Kalki Teamஇந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் சருமம் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும் தீரும். வயோதிகத்தால் வரும் தோல் சுருக்கங்கள் தாமதமாகும்.

செய்முறை:

விரிப்பில் அமர்ந்து கொண்டு சுண்டு விரல், கட்டை விரலின் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்கட்டும். இரு கைகளிலும் இந்த முத்திரையைப் பிடிப்பது அவசியம். இந்த முத்திரையை 10 நிமிடங்கள் வரை செய்யலாம்

பலன்கள்:

கருவளையத்தைப் போக்கும். தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்துவர, இரண்டு வாரங்களிலேயே மாற்றம் தெரியும். முகப்பரு மறையும். முகத்தில் பளபளப்பு அதிகரிக்க, இதைச் செய்யலாம். முகத்தில் உள்ள மாசு, மருக்கள் மறையும். சருமம் மற்றும் கூந்தல் வறட்சி சரியாகும். சருமம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் தீரும். வயோதிகத்தால் வரும் தோல் சுருக்கங்கள் தாமதமாகும்.


Post Comment

Post Comment