வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டாவில் தனியாக மெசேஜ் அனுப்பும் வசதி :


Posted by-Kalki Teamவாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் ரிப்ளை பிரைவேட்லி என்ற பெயரில் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது.

ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான வாட்ஸ்அப் பீட்டா அப்டேட்டில் ரிப்ளை பிரைவேட்லி (Reply privately) என்ற பெயரில் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது. பெயருக்கு ஏற்றார்போல் புதிய அம்சம் கொண்டு க்ரூப்களில் அனுப்பப்படும் மெசேஜ்களுக்கு தனியே பதில் அனுப்ப முடியும்.

ரிப்ளை பிரைவேட்லி ஆப்ஷனை கிளிக் செய்ததும், வாட்ஸ்அப் குறிப்பிட்ட கான்டாக்ட் உடன் பிரைவேட் சாட் திரையை தானாக திறக்கும். இந்த அம்சம் கொண்டு க்ரூப்களில் உள்ள பழைய சாட்களுக்கும் தனியே மெசேஜ் அனுப்ப முடியும். புதிய அம்சம் வாட்ஸ்அப் 2.18.335 வெர்ஷனில் வழங்கப்பட்டு இருப்பதால், புதிய அப்டேட்டை டவுன்லோட் செய்ய வேண்டும்.

புதிய 2.18.338 அப்டேட்டில் யுனிகோட் 11 எமோஜி சேர்க்கப்பட்டிருக்கிறது. இதனால் 66 புதிய எமோஜிக்கள் சேர்க்கப்படுகிறது. இதில் சாஃப்ட்பால், கங்காரு, பார்டியிங் ஃபேஸ், பேரட் மற்றும் பல்வேறு இதர எமோஜிக்கள் கிடைக்கும். வாட்ஸ்அப் பிரைவேட் ரிப்ளை அம்சம் மூலம் க்ரூப்பில் உள்ள மற்றவர்களுக்கு தெரியாமல் ஒருவருக்கு மட்டும் தனியே பதில் அனுப்ப முடியும்.

தற்சமயம் ஆன்ட்ராய்டு தளத்தில் மட்டும் வழங்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் ஐ.ஓ.எஸ். தளத்தில் வழங்குவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

வாட்ஸ்அப் பிரைவேட் ரிப்ளை அம்சத்தை பயன்படுத்த, பயனர் குறிப்பிட்ட மெசஜை அழுத்தி பிடிக்க வேண்டும், இனி திரையில் தோன்றும் மூன்று புள்ளி மெனு ஆப்ஷனை கிளிக் செய்து ரிப்ளை பிரைவேட்லி அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும்.

வாட்ஸ்அப் பீட்டா செயலியில் வழங்கப்பட்டு இருப்பதால், பயனர்கள் பீட்டா பதிப்பில் சைன்-இன் செய்தால் மட்டுமே செயலியை பயன்படுத்த முடியும்.


Post Comment

Post Comment