புலியில் தெறித்தவர் தெறியிலும் தெறிக்க விடுவாரா.?


Posted by-Kalki Teamபுலி படம் என்றதுமே விஜய் ஞாபகத்திற்கு வருகிறாரோ இல்லையோ, அந்தப் படத்தின் இசை வெளியீட்டில் புலி...புலி...புலி என அடுக்கு மொழிகளால் பேசிய டிஆர் தான் முதலில் ஞாபகத்திற்கு வருவார். புலி படம் மட்டும் நன்றாக இருந்திருந்தால் அந்தப் படத்திற்கு இலவசமாக விளம்பரங்களை தனது பேச்சால் தந்தவர் என டிஆரை பலரும் மெச்சியிருப்பார்கள். ஆனால், அப்படி ஒரு விஷயம் நடக்காமல் போய்விட்டது.இருந்தாலும் டிஆர் என்ற பிராண்டை விஜய்யும் விடுவதாக இல்லை போலிருக்கிறது. ஜி.வி.பிரகாஷின் இசையில் 50வது படமாக உருவாகி வரும் தெறி படத்தில் டிஆர் ஒரு குத்துப் பாடலை தெ.......றிறிறிறிறிக்க விட்டிருக்கிறார் என ஜி.

வி. நேற்று தெரிவித்துள்ளார். ஒரு புலியைப் பல புலியாக்கி டிஆர் பேசியதற்கே பல மீமீக்கள் சமூக வலைத்தளங்களில் சூறாவளியாக சுழன்றன. தெறி படத்தில் அவர் பாடியுள்ள குத்துப் பாடலில் எத்தனை தெறிக்களை தெறிக்க விட்டிருப்பாரோ என மீமீக்களை உருவாக்குபவர்கள் இப்போது எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படியோ ரசிகர்களுக்கு சரியான ஒரு என்டர்டெயின்மென்ட் கிடைக்கப் போவது நிச்சயம்.


Post Comment

Post Comment