96 படத்தின் அதிகாலை காட்சிகள் ரத்து - ரசிகர்கள் ஏமாற்றம் :


Posted by-Kalki Teamசி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `96 படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகவிருக்கும் நிலையில், படத்தின் அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `96 விஜய் சேதுபதி - திரிஷா காதலர்களாக நடித்திருக்கும் இந்த படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகிறது.

பொதுவாகவே முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். அந்த வகையில் 96 படத்திற்கும் அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் படத்தின் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. காலை காட்சிகள் ரத்தானதால் திரையரங்கில் கூடிய ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அடுத்தடுத்த காட்சிகள் தடைபடாதவாறு தயாரிப்பாளர் தரப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சி.பிரேம்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஜனகராஜ், வர்ஷா பொலம்மா, தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், கவிதாலயா கிருஷ்ணன், பகவதி பெருமாள், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

கோவிந்த் மேனன் இசையில் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Post Comment

Post Comment