சத்து நிறைந்த கேழ்வரகு கார கொழுக்கட்டை :


Posted by-Kalki Teamசர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று கேழ்வரகில் கார கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ராகி (கேழ்வரகு) மாவு - 2 கப்,

அரிசி மாவு - ஒரு கப்,

பச்சை மிளகாய் - 4,

வெங்காயம் - ஒன்று,

கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,

உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,

கறிவேப்பிலை - சிறிதளவு,

எண்ணெய் - 4 டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கேழ்வரகு மாவு, அரிசி மாவை சேர்த்து வெறும் கடாயில் சூடுபட வறுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும்.

அடுத்து அதில் வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு புரட்டவும்.

உப்பு சேர்த்துக் கிளறவும்.

தேவையான அளவு தண்ணீர் விட்டு, கொதி வந்தவுடன் மாவு சிறிது சிறிதாக சேர்த்து கைவிடாமல் கிளறவும். கெட்டியானதும் இறக்கி ஆறவிடவும்.

ஈரக் கையினால் மாவை சிறிது எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டி வைக்கவும். தயாரித்தவற்றை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

சத்து நிறைந்த கேழ்வரகு கார கொழுக்கட்டை ரெடி.


Post Comment

Post Comment