மகனின் முதல் பிறந்த நாளைக் கொண்டாடிய அஜீத்- ஷாலினி!


Posted by-Kalki Teamநடிகர் அஜீத் - ஷாலினி தம்பதில் தங்கள் மகன் ஆத்விக்கின் முதல் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடினர்.

சில ஆண்டுகளுக்கு முன் அஜீத் - ஷாலினிக்கு அனோஷ்கா என்ற மகள் பிறந்தாள். கடந்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி மகன் பிறந்தான்.

மகனுக்கு ஆத்விக் என்று பெயர் சூட்டினர். நேற்று அவனுக்கு முதல் பிறந்த நாள். இந்த தினத்தை அஜீத்தின் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாடினர்.

அஜீத் - ஷாலினியும் மகன் பிறந்த நாளை விமரிசையாகக கொண்டாடினர்.

நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் அஜீத், ஷாலினியின் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

மகனுக்கு வெண்பட்டு வேட்டி, சட்டை, அங்கவஸ்திரம் அணிவித்து அழகு பார்த்தனர் அஜீத்தும் ஷாலினியும்.Post Comment

Post Comment