சாம்பார் சாதத்திற்கு அருமையான வாழைக்காய் சிப்ஸ் :


Posted by-Kalki Teamகுழந்தைகள் மாலையில் சாப்பிடுவதற்கு ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? வீட்டில் வாழைக்காய் இருந்தால், அதனைக் கொண்டு சிப்ஸ் செய்து கொடுக்கலாம்

தேவையான பொருட்கள் :

வாழைக்காய் - 1

உப்பு - தேவையான அளவு

மிளகுத் தூள்/மிளகாய் தூள் - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை :

வாழைக்காயை நீரில் கழுவி, இரு முனைகளையும் வெட்டி தோலுரித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை மெல்லியதாக, வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடானதும், அதில் வாழைக்காய் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, ஒரு பௌலில் போட்டு, அதில் மிளகுத் தூள்/மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறினால், வாழைக்காய் சிப்ஸ் ரெடி.

இதனை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

சூப்பரான வாழைக்காய் சிப்ஸ் ரெடி.


Post Comment

Post Comment