பெண்கள் செல்ல விரும்பும் ரகசிய சுற்றுலாத் தலங்கள்..!


Posted by-Kalki Teamபெண்களும் அன்றாட பணிச் சுமையில் இருந்து விடுதலை பெற சில தலங்களுக்கு குறிப்பாக தனிமையும், ரம்மியமும் நிறைந்த சூழலுடைய பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை விரும்புகின்றனர்.

பெரும்பாலும் சுற்றுலா என்றதுமே ஆண்கள் தான் முன்னிலையில் இருப்பார்கள் என்றில்லை. பெண்களும் அன்றாட பணிச் சுமையில் இருந்து விடுதலை பெற சில தலங்களுக்கு குறிப்பாக தனிமையும், ரம்மியமும் நிறைந்த சூழலுடைய பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை விரும்புகின்றனர். குறிப்பாக, காதலிப்பவராக இருந்தால் ஒருபடி மேலே போய் கட்டாயம் சுற்றுலா செல்வதை நோக்கமாகக் கொண்டிருப்பர். அப்படி அவர்களே கேட்டு சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதை விட அவர்களது மனதை புரிந்து முன்கூட்டியே அத்தலங்களுக்கு ஒரு ரைடு போய்ட்டு வருவது உங்களது காதலை மேலும் பலப்படுத்தும்.

சென்னை ஈசிஆர் சாலை

சென்னையில் வசிப்பவர்களுக்கு இசிஆர் சாலை என்பது மிக வாடிக்கையான சாலை தான். ஆனால், அங்கு பெரும்பாலும் நண்பர்களுடன் தான் சென்றிருப்பீர்கள். அந்தி மாலைப் பொழுதில் உங்களது காதலியை அழைத்துச் சென்று பாருங்கள். சென்னையிலிருந்து பாண்டிச்சேரி வழியாக தரங்கம்பாடி வரையிலான சாலையில் பயணம் மட்டுமின்றி தனிமைப் பேச்சும் வெளிப்படும். கடற்கரையை ஒட்டி செல்லும் சாலைகள், அலையில் மறையும் சூரியன் என ஏதோ இனம் தெரியா வருடல் மனதில் தோன்றும். உங்களது காதலுக்கு அது மிகவும் பிடிக்கும்.

கோவா

கோவா என்றதுமே நண்பர்களுடன் மட்டும் செல்லக் கூடிய சுற்றுலாத் தலம் இல்லைங்க. அங்கே பெண்களுக்கும் ஏராளமான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக, கடற்கரையோரம் கைவினைப் பொருட்கள், அழங்காரப் பொருட்கள், மாறுபட்ட ஆடையகங்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம். சென்னை, கேரளா உள்ளிட்ட கடற்கரைச் சுற்றுலாத் தலங்களைக் கடந்து உங்களது காதலியை நீண்ட தூரம் அழைத்துச் சென்றதாகவும் இது இருக்கும்.

மூணார்

மலை முகடுகள் சூழ, மேகக் கூட்டங்களின் நடுவே காதலியின் கைகோர்த்தபடி நடந்து செல்ல யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. ஆனால், தற்போது மலைகளால் சற்று அச்சுருத்தலாக உள்ள இம்மலைக்கு அடுத்த கோடை காலத்தில் போய் பாருங்கள். கூடுதலான பல அம்சங்கள், பசுமைச் சோலைகள், பூத்துக் குழுங்கும் பூக்கல் என இன்னும் கூடுதலான அழகை மூணார் பெற்றிருக்கும்.

கூடலூர்

கூடலூர், ஊட்டிக்கு அடுத்துள்ள ஓர் சிறிய மலைப் பிரதேசம். ஊட்டி பெரும்பாலும் உங்களுக்கு தெரிந்ததாக இருக்கும். ஆனால், அதைத் தாண்டி செல்லும் மலைப் பாதையும், தேயிலைத் தோட்டங்களின் நடுவே தென்படும் குடியிருப்புகளும் கொண்டுள்ள கூடலூர் புதுவித அனுபவங்களை நிச்சயம் தரும். குறிப்பாக, இங்குள்ள பிரத்யேக தங்கும் விடுதிகள், மலை ரிசார்ட்டுகள் என அனைத்தும் புதுமையாகத்தான் இருக்கும்.

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி என்றதும் பாதி விலையில் சரக்கு மட்டும் கிடைக்கும் ஊர் இல்லைங்க. பலவகையான மாறுபட்ட உணவுகள், புதுவித கலாச்சாரத்தை விரும்பும் பெண்களுக்கும் பிடித்த ஊர் தான் பாண்டிச்சேரி. ஒருமுறையாவது உங்களுக்கு விருப்பமானவரை இங்கு அழைத்துச் செல்லுங்கள். நண்பர்களைக் கடந்து காதலியை அழைத்துச் சென்ற உங்கள் மீது இனம்புரியா காதல் கூடுதலாகும்.Post Comment

Post Comment