அர்த்த சின் முத்திரை தலைவலியை குணமாக்கும் :


Posted by-Kalki Teamதலைவலி ஏற்பட ஆயிரக்கணக்கான காரணங்கள் உள்ளதாக மருத்துவம் சொல்கிறது. தலைவலிக்கு அர்த்த சின் முத்திரை நல்ல பலனை தரும்.

தலைவலி ஏற்பட ஆயிரக்கணக்கான காரணங்கள் உள்ளதாக மருத்துவம் சொல்கிறது. ஆனால், எதைப் பற்றியும் கவலையின்றி வலி நிவாரணிகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். தலைவலி எதனால் ஏற்படுகிறது என்று கண்டறிந்து அதற்கான சிகிச்சை பெற வேண்டும். அதனுடன், சில முத்திரைகள் செய்வதன் மூலம் விரைவில் குணம்பெற முடியும்.

செய்முறை: ஆட்காட்டி விரல் கட்டை விரலின் முதல் ரேகையில் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்க வேண்டும்.

இந்த முத்திரையை தரையில் அமர்ந்தும், சேரில் அமர்ந்தும் செய்யலாம்.

செய்ய வேண்டிய கால அளவு: தினமும் 15 நிமிடங்களும் அதற்கு மேலும் செய்யலாம். தலைவலி இருக்கும் போது செய்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.


Post Comment

Post Comment