நடிகர் சங்க கிரிக்கெட் : விஜய் - அஜித் அணிகள் மோதல்?


Posted by-Kalki Teamதென்னிந்திய நடிகர் சங்க கட்டட நிதிக்காக நடத்தப்படும், நட்சத்திர கிரிக்கெட் போட்டியில், நடிகர் விஜய் - அஜித் தலைமையிலான அணிகள் மோத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் சங்க கட்டட நிதிக்காக, அனைத்து நடிகர்களும் இணைந்து, படம் தயாரிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அந்த திட்டம் கைவிடப்பட்டு, நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. ஏப்., 10ல் நடக்க உள்ள கிரிக்கெட் போட்டியில், ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட அனைத்து முக்கிய நடிகர்களையும் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.குறைந்த பட்சம், மூன்று போட்டிகளை நடத்தவும், ஒரு போட்டியில், நடிகர் விஜய் - அஜித் தலைமையிலான அணிகளை மோத வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.Post Comment

Post Comment