மஹத்யோக பிராணாயாமம் :


Posted by-Kalki Teamமஹத்யோக பிராணாயாம பயிற்சியினால் நுரையீரலின் அனைத்து பாகத்திற்கும் காற்று நன்கு பரவுகிறது. அசுத்த காற்று அதிகளவு வெளியேற்றப்படுகிறது.

நுரையீரலின் முழுமையான சுவாசமுறை:

செய்முறை: வஜ்ராசனத்தில் அமரவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். அதம, மத்யம, ஆத்ய பிராணாயா மத்தில் செய்த மூன்று விதமான உடலியக் கத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக இந்த பிராணாயாமத்தில் செய்ய வேண்டும். வலது உள்ளங்கையை மார்பின் மேலும், இடது உள்ளங்கையை வயிற்றுப் பகுதியிலும் வைக்கவும்.

மூச்சை முழுவதுமாக இரு நாசிகளின் வழியாக வெளியே விடவும். மூச்சை நிதானமாகவும், ஆழமாகவும் இழுத்தபடி முதலில் வயிற்றுப் பகுதியில் காற்றை நிரப்பி, அதைத் தொடர்ந்து மார்புப் பகுதியிலும், அடுத்து மார்பின் மேல் பகுதியிலும் காற்றை நிரப்பவும். ஓரிரு வினாடிகள் மூச்சை அடக்கவும். பிறகு மூச்சுக்காற்றை நிதானமாக வெளியே விட்டபடி முதலில் வயிற்றுத் தசைகள், அடுத்து மார்பு, அதையடுத்து மார்பின் மேல்பகுதி என ஒன்றன்பின் ஒன்றாக சுருக்கவும். இப்படி தொடர்ந்து 3 முதல் 6 முறை செய்யவும். இரு ஒரு சுற்று பயிற்சியாகும்.

இந்த பயிற்சியை 3 முதல் 6 சுற்று பயிற்சி செய்யவும். பிறகு கைகளை கீழே இறக்கி சில வினாடிகள் ஓய்வு பெறவும்.

கவனம் செலுத்த வேண்டிய இடம்: அத்ம சுவாசத்தில் வயிறு மற்றும் மணிபூர சக்கரத்தின் மீதும், மத்யம சுவாசத்தில் மார்பு மற்றும் அனாஹத சக்கரத்தின் மீதும், ஆத்ய சுவாசத்தில் மார்பின் மேல் பகுதி மற்றும் விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

ஆரம்பப் பயிற்சியில் தொடர்ந்து நான்கு வகை பிராணாயாமத்தையும் வஜ்ராசனத்தில் செய்ய முடியாதவர்கள் ஒவ்வொரு பிராணாயாமத்திற்குப் பிகும் சுகாசனத்தில் சில வினாடிகள் ஓய்வு பெற்று, பிறகு வஜ்ராசனத்தில் அமர்ந்து செய்யலாம்.

வஜ்ராசனத்தில் சில வினாடிகள் கூட அமர்ந்து பயிற்சி முடியாதவர்கள் ஒரு மர நாற்காலியின் மேல் அமர்ந்து பயிற்சி செய்யலாம். அப்படி நாற்காலியின் மீது அமர்ந்து பயிற்சி செய்யும் போது முதுகு, கழுத்து, தலை நேராக இருக்கட்டும். முழங்கால்களுக்கு நேராக தரைவிரிப்பின் மேல் குதிகால்கள் வரும்படி வைக்கவும். பாதம் இரண்டும் முழுமையாக தரைவிரிப்பின் மேல் படிந்திருக்கட்டும்

பயன்கள்: மஹத்யோக பிராணாயாம பயிற்சியினால் நுரையீரலின் அனைத்து பாகத்திற்கும் காற்று நன்கு பரவுகிறது. நுரையீரலின் கொள்ளளவு அதிகரிக்கப்படுகிறது. அசுத்த காற்று அதிகளவு வெளியேற்றப்படுகிறது.


Post Comment

Post Comment