பெண்களுக்கான திருமண தோஷ பரிகாரங்கள் :


Posted by-Kalki Teamதிருமண தோஷம் உடைய பெண்கள் எந்த முறைப்படி ஸ்ரீகருடனை வழிபட்டால் திருமண தோஷம் நிவர்த்தியாகும் என்பதை பற்றி சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இந்த காலத்தில் எல்லா அம்சங்களும் நிறைந்த பெண்களுக்கு திருமணம் நடப்பது என்பதே மிகவும் அரிதான செயலாக இருக்கின்றது. அவர்களுக்கு தோஷமான ஜாதக அமைப்பாக இருந்தால் இன்னும் சிக்கல்தான். அப்படிப்பட்ட பெண்களுக்கு கண்கண்ட தெய்வம்தான் ஸ்ரீகருட பகவான். தன் அன்னையின் துயர் தடைத்து, அவரை அடிமைத்தளையில் இருந்து விடுவித்து மகிழ்வித்த உத்தம புத்திரன் அல்லவா அவர். அவரை யார்-யார் எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.

திருமண தோஷம் உடைய பெண்கள் கீழ்க்கண்ட முறைப்படி ஸ்ரீகருடனை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

1. பெண்கள் பிறந்த லக்னத்திற்கு 7-ம் வீட்டு அதிபதியின் வாரத்தில் ஸ்ரீகருடனை வழிபட்டு வர வேண்டும்.

2. அல்லது 7-ம் வீட்டதிபதி அமர்ந்த வீட்டின் அதிபதியாக யார் இருக்கிறாரோ, அவருக்குரிய வாரத்தில் வழிபடலாம்.

3. அல்லது ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ள வீட்டதிபதி எங்கு அமர்ந்துள்ளாரோ அந்த வீட்டின் வாரத்திலும் வழிபடலாம்.

4. அல்லது ஒவ்வொருவரும் அவரவர் ராசிக்கு எதிரில் கொடுக்கப்பட்டுள்ள கிழமைகளில் ஸ்ரீகருட பகவானுக்கு துளசி மாலை அணிவித்து, நெய் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் திருமணத் தடை நீங்கும்.

மேஷம் - வெள்ளிக்கிழமை

ரிஷபம் - செவ்வாய்க்கிழமை

மிதுனம் - வியாழக்கிழமை

கடகம் - சனிக்கிழமை

சிம்மம் - சனிக்கிழமை

கன்னி - வியாழக்கிழமை

துலாம் - செவ்வாய்க்கிழமை

விருச்சிகம் - வெள்ளிக்கிழமை

தனுசு - புதன்கிழமை

மகரம் - திங்கட்கிழமை

கும்பம் - ஞாயிற்றுக்கிழமை

மீனம் - புதன்கிழமை

பெண்களின் ஜாதகத்தில் எட்டாம் வீட்டில் ராகு இருந்தால் அதனை மாங்கல்ய தோஷம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. அதனையும் இந்த கருட வழிபாட்டால் நீக்க முடியும்.


Post Comment

Post Comment