எனக்கு யாரைப் பார்த்தும் பயம் இல்லை... சீமராஜா மாசில் சிவகார்த்திகேயன்!


Posted by-Kalki Teamசிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

தனக்கு யாரை பார்த்தும் பயம் இல்லை என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் பொன்ராம் இணையும் திரைப்படம் சீமராஜா. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி, லால் உள்பட பலர் இதில் நடித்துள்ளனர்.

டி.இமான் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை 24AM ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். இப்படம் வரும் 13ம் தேதி விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது. படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

பாகுபலி மாதிரி இருக்கு

இதில் கலந்துகொண்டு, சிவகார்த்திகேயன் பேசியதாவது, "இந்த ட்ரெய்லரின் கடைசி 3 ஷாட் பார்த்து சமூக வலைத்தளங்களில் பாகுபலி மாதிரி இருக்கு என பாராட்டுக்கள் இருந்தன. அது எங்களுக்கு, எங்கள் உழைப்புக்கு கிடைத்த பெருமை. இந்த படத்தை விநாயகர் சதூர்த்திக்கு வெளியிட திட்டமிட்டோம்.

பாராட்டுக்கள்

இடையில் ஸ்ட்ரைக் வந்ததால் ஒருமாதம் தடைப்பட்டது. ஆனால் அதையும் தாண்டி படத்தை குறித்த தேதிக்கு வெளியிட உழைத்த ஒட்டுமொத்த குழுவுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ் மன்னன்

படத்தில் நான் ஒரு தமிழ் மன்னராக நடித்திருக்கிறேன். அது எனக்கு பெருமையான விஷயம். இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம். ரஜினி முருகன் படத்தின்போதே இந்த ஐடியா பற்றி இயக்குனர் பொன்ராமும் நானும் பேசினோம்.

காமெடிக்கு பஞ்சமிருக்காது

இந்த படத்தில் வரும் ஆக்‌ஷன் காட்சிகள் குழந்தைகளும் பார்க்கும் வகையில் வன்முறை இல்லாமல் செய்திருக்கிறோம். இந்த படத்திலும் காமெடிக்கு பஞ்சமிருக்காது. சூரி இருக்கும் போது எப்படி காமெடி இல்லாமல் போகும்.

யாரை பார்த்தும் பயப்படுவதில்லை

என்னை பேச அழைக்கும் போது தன்னை தானே போட்டியாக நினைத்து உழைக்கும் சிவகார்த்திகேயன் என தொகுப்பாலினி கூறினார். அது உண்மைதான். நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை, யாரை பார்த்தும் பயப்படுவதில்லை, பொறாமையும் கிடையாது, என் அடுத்த கட்டத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறேன்", என்றார் சிவகார்த்திகேயன்.Post Comment

Post Comment