பறந்து கொண்டே பாட்டு பாடிய சந்தானம்!


Posted by-Kalki Teamவல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களைத் தொடர்ந்து தில்லுக்குத்துட்டு, சர்வர் சுந்தரம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் சந்தானம். இதில் தில்லுக்குத்துட்டு படப்பிடிப்பு முடிந்து விட்டது. இறுதிகட்டமாக ஆஷ்னா சவேரியுடன் அவர் நடித்த ரொமான்ஸ் பாடல் ஒன்று சென்னை மீனம்பாக்கம் தரமணியில் 40 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைத்து படமாக்கப்பட்டுள்ளது.இந்த பாடல் காட்சி முழுக்க முழுக்க சந்தானம்-ஆஷ்னா சவேரி ஆகிய இருவரும் பறந்து கொண்டே பாடுவது போல் படமாக்கப்பட்டுள்ளதாம். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு புதுமை இருக்க வேண்டும் என்று யோசித்த பிறகுதான் இப்படியொரு பாடலை படமாக்கியுள்ளாராம் சந்தானம்.

அதோடு, தனது உடல்கட்டை முன்னணி இளவட்ட ஹீரோக்கள் ரேஞ்சுக்கு மாற்றியதோடு அதிரடி நடனமும் ஆடியுள்ள சந்தானம், இந்த தில்லுக்குத்துட்டு படத்திற்கு பிறகு காமெடியன் என்கிற இமேஜில் இருந்து முழுமையாக விடுபட்டு முழு ஹீரோ அங்கீகாரத்தை பெற்று விடுவார் என்கிறார்கள் தில்லுக்குத்துட்டு படக்குழுவினர்.


Post Comment

Post Comment