மாலை நேர ஸ்நாக்ஸ் பிரெட் பக்கோடா :


Posted by-Kalki Teamமாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த ஸ்நாக்ஸ் பிரெட் பக்கோடா. இன்று இந்த பக்கோடாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பிரெட் - 5 துண்டுகள்

வெங்காயம் - 2 (நறுக்கியது)

இஞ்சி துண்டு - சிறிய துண்டு

மிளகாய் - 3

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய், தண்ணீர்- தேவைக்கு

உப்பு - தேவைக்கு

செய்முறை :

ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

பிரெட்டை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

பிரெட் துண்டுகளுடன் வெங்காயம், இஞ்சி, மிளகாய், உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பிரெட் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக பரவலாக கிள்ளி போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

சுவையான பிரெட் பக்கோடா ரெடி.


Post Comment

Post Comment