2016 பிப்ரவரி மாதத் திரைப்படங்கள் - ஓர் பார்வை


Posted by-Kalki Team2016ம் ஆண்டின் இரண்டாவது மாதம் இருதினங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த 2016ம் வருடத்தில் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வரும் லீப் ஆண்டில், இந்த மாதத்தில் எத்தனை படங்கள் லீட்டில் இருந்தன என்பதைக் கணக்கிட்டால் அவற்றில் ஸ்லிப் ஆகி ஸ்லீப் வராமல் தவித்தவர்கள்தான் அதிகம் இருக்கும்.ஜனவரியில் 18கடந்த ஜனவரி மாதத்தில் 18 திரைப்படங்கள் வெளிவந்தன. அவற்றில் பொங்கலுக்கு வெளிவந்த ரஜினி முருகன், மாதக் கடைசியில் வெளிவந்த அரண்மனை 2, இறுதிச்சுற்று ஆகிய படங்களே வியாபார ரீதியாகவும் வெற்றிப் படங்களாக அமைந்தன. 18 படங்களில் 3 படங்களைத் தவிர 15 படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன.

பிப்ரவரியில் 16இந்த பிப்ரவரி மாதத்தில் 16 படங்கள் வெளிவந்துள்ளன. வழக்கம் போலவே இந்த மாதத்திலும் பெரிய படங்கள், சிறிய படங்கள் என கலவனையான படங்கள்தான் வெளிவந்துள்ளன. ஆனாலும், மிகப் பெரிய ஹீரோக்களின் படங்கள் என குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்தப் படமும் இல்லை என்பதுதான் முக்கியமான விஷயம். கடந்த மாதம் கூட மிகப் பெரிய ஹீரோக்களின் படங்கள் வரவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய விசாரணைபிப்ரவரி 5ம் தேதி "நாளை முதல் குடிக்க மாட்டேன், சேதுபூமி, சாகசம், விசாரணை, பெங்களூர் நாட்கள் ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் முதலிரண்டு படங்கள் ரசிகர்கள் கவனிக்கப்படாமலே போய்விட்டன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரஷாந்த் நடித்த சாகசம் படம் 90களில் வந்திருக்க வேண்டிய படம் போல அமைந்ததாக ரசிகர்கள் குறிப்பிட்டனர். வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த விசாரணை படம் விமர்சன ரீதியாக பலத்த வரவேற்பைப் பெற்ற படமாக அமைந்தது. அதோடு குறைவான திரையரங்குகளில் வெளியானாலும் நிறைவான வசூலைத் தந்ததாகவே இருந்தது என வினியோக வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமாவின் தரத்தை இன்னும் ஒரு படி மேலே உயர்த்தும் படமாக விசாரணை அமைந்தது. ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா டகுபட்டி, ஸ்ரீதிவ்யா, பார்வதி என தமிழ் சினிமாவில் அபூர்வமாக வசூல் மல்டி ஸ்டார் படமாக வந்த பெங்களூர் நாட்கள் படமும், கதையும் தமிழ் ரசிகர்களைத் திருப்திப்படுத்தவில்லை. சில மலையாளப் படங்கள் தமிழுக்கு எடுபடாமல் போய்விடும் என்பதற்கு மீண்டும் ஒரு உதாரணமாக இந்தப் படம் அமைந்தது.வித்தியாசமான ஜில் ஜங் ஜக்பிப்ரவரி 12ம் தேதி இரண்டு மனம் வேண்டும், வெண்ணிலாவின் அரங்கேற்றம், வில் அம்பு, ஜில் ஜங் ஜக், அஞ்சல ஆகிய படங்கள் வெளிவந்தன. முதலிரண்டு படங்கள் வழக்கம் போல வந்த சுவடு கூட தெரியாமல் போய்விட்டன.வில் அம்பு திரைப்படம் அற்புதமான திரைக்கதையுடன் வித்தியாசமாக வெளிவந்த படம். யாராவது பிரபலமான ஹீரோக்கள் நடித்திருந்தால் இந்தப் படத்தின் வெற்றியே வேறு விதமாக அமைந்திருக்கும். சித்தார்த் தயாரித்து நடித்த ஜில் ஜங் ஜக் வித்தியாசமான படம்தான் என்றாலும் ரசிகர்களை ஈர்க்கும் விஷயங்கள் படத்தில் குறைவாக இருந்ததும், ஹீரோயின் கூட இல்லாமல் டிரை ஆக இருந்ததும் படத்தை ஜில் ஆக வெற்றி பெற வைக்காமல் ஜக் ஆக்கிவிட்டது. அஞ்சல படம் உணர்வு பூர்வமான ஒரு மையக் கருவைக் கொண்ட படம். அதை எப்படித் திரைக்கதையாக்கி மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் இயக்குனர் குழம்பிவிட்டார். இருந்தாலும் படத்தில் வந்த பிளாஷ் பேக் காட்சிகள் ரசிகர்களை ஈர்த்தன. அடுத்த படத்தில் இயக்குனர் தங்கம் சரவணன் தன்னை சரி செய்து கொள்வாரா என்று பார்ப்போம். தமிழ் சினிமாவின் முதல் ஸோம்பி கதைபிப்ரவரி 19ம் தேதி "நவரச திலகம், மிருதன், சேதுபதி" ஆகிய படங்கள் வெளிவந்தன. சின்னத் திரையிலிருந்து பெரிய திரைக்கு வருபவர்கள் எல்லாம் தங்களுக்குள் சிவகார்த்திகேயனையும், சந்தானத்தையும், நினைத்துக் கொண்டுதான் வருகிறார்கள். அந்த வெற்றி அவ்வளவு சுலபத்தில் கிடைக்காது என்பது மகாபா ஆனந்துக்கு இந்நேரம் புரிந்திருக்கும். அதற்கான காரணம் என்ன என்பதை அவர்தான் அலசி ஆராய வேண்டும். தமிழ் சினிமாவில் முதல் ஸோம்பி படம் என வெளியீட்டிற்கு முன் பரபரப்பாக டிரைலரில் மிரட்டினார்கள். ஆனால், சமீப காலமாக பல பேய்க் கதைகளைப் பார்த்து பேய்களுடன் ஃபிரண்டாகி விட்ட குழந்தைகளைக் கூட மிருதன் மிரட்டவில்லை. ஆனால், வசூல் நன்றாக இருப்பதாகத் தகவல், உண்மை எதுவோ?. விஜய் சேதுபதியின் சேதுபதி அவருடைய நடிப்பால் ரசிகர்களை ஏமாற்றவில்லை, இருந்தாலும் திரைக்கதையில் உள்ள லாஜிக்குகளால் ஷேக் ஆனது உண்மை. இந்த இரண்டு படங்களுக்கும் மிக மோசமான பெயர்களும் கிடைக்கவில்லை, மிகவும் நல்ல பெயர்களும் கிடைக்கவில்லை. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என்று ரசிகர்கள் சொல்லிவிட்டார்கள்.70வயது எஸ்.ஏ.சி.யின் ஆக்ஷ்ன ஹீரோ ஆசைபிப்ரவரி 26ம் தேதி "நையப்புடை, கணிதன், ஆறாது சினம்" ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. இயக்குனராக பல வெற்றிப் படங்களைக் கொடுத்த எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு 70 வயதுக்கு மேல் எதற்கு நடிக்கும் ஆசை என திரையுலகததிலேயே முணுமுணுப்பு கேட்கிறது. டூரிங் டாக்கீஸ் படத்தில் நடித்த போதே தியேட்டருக்கு ஆட்கள் வரவில்லை. நையப் புடையில் படையெடுத்து வந்துவிடுவார்கள் என எப்படி நினைத்தார்களோ?.தெறி, கபாலி படங்களுக்கு முன்பாக கணிதன் படத்தையும் வியாபாரப்படுத்திவிட்டார் தயாரிப்பாளர் தாணு. ரசிக்கும் வைக்கும் கதையாக இருந்தாலும் திரைக்கதையில் புத்திசாலித்தனம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் இப்படத்தைக் காண வருபவர்கள் எண்ணிக்கை பரவாயில்லை என்றே சொல்கிறார்கள். ஆறாது சினம் படம் மூலம் மீண்டும் தன்னுடைய கதைத் தேர்வில் உள்ள அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறார் அருள்நிதி. தன் அண்ணன் உதயநிதியுடன் ஒப்பிடும் போது அருள்நிதி தேர்ந்தெடுக்கும் படங்கள் மூலம் முன்னணியில் இருக்கிறார் என்றே கோலிவுட் வட்டாரங்கள் சொல்கின்றன. நல்ல இயக்குனர்களிடம் சிக்கினால் அருள்நிதி இன்னும் மோல்ட் ஆகி விடுவார். ஆறாது சினம் படத்திற்கு ஆறாக வசூல் வரவில்லை என்றாலும் வறண்டு போகாத வசூல் தொடரும் என்கிறார்கள். பிப்ரவரி மாதம் வெளிவந்த படங்களைப் பொறுத்தவரையில் பிரமாதம் என்ற சொல்லுக்கு விசாரணை படம் முழு தகுதியுடன் இருப்பதாகவே பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். மற்ற படங்களின் நிலவரத்தைப் பற்றி அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்கள் முழு விசாரணையை நடத்தினால் சுமாரான வெற்றிக்கும், தோல்விக்கும் என்ன காரணம் என்பது அவர்களுக்கே புரியும்.2016 பிப்ரவரி மாதம் வெளிவந்த திரைப்படங்கள் விவரம்...பிப்ரவரி 5நாளை முதல் குடிக்க மாட்டேன்சேது பூமிசாகசம்விசாரணைபெங்களூர் நாட்கள்பிப்ரவரி 12இரண்டு மனம் வேண்டும்வெண்ணிலாவின் அரங்கேற்றம்வில் அம்புஜில் ஜங் ஜக்அஞ்சலபிப்ரவரி 19நவரச திலகம்மிருதன்சேதுபதிபிப்ரவரி 26நையப்புடைகணிதன்ஆறாது சினம்


Post Comment

Post Comment