பன்னீர் புலாவ்:


Posted by-Kalki Teamகுழந்தைகளின் பேவரிட் டிஷ் ஆன பன்னீரில் புலாவ் செய்து பார்ப்போமா?

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 1 பாக்கெட்

நெய் - 3 ஸ்பூன்

சீரகம் - 1/2 ஸ்பூன்

பல்லாரி - 1

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 3 பல்

பட்டை - சிறிதளவு

செய்முறை:

பாசுமதி அரிசியில் 2 கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்கவும். பல்லாரி,பச்சை மிளகாய்,பூண்டை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி,காய்ந்ததும் சீரகம்,பட்டையை போட்டு பொரிக்கவும்.இத்துடன் நறுக்கிய பல்லாரி,பூண்டு,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.நீரின்றி அரிசியை வடிகட்டி மேற்கண்ட கலவையுடன் சேர்க்கவும்.இப்போது அரிசியை விட 2 மடங்கு தண்ணீர்,உப்பு சேர்த்து உதிரியாக வேக வைக்கவும்.மற்றொரு வாணலியில் லேசான இளஞ்சூட்டில் பன்னீர் துண்டுகளை பொரித்து நெய்யுடன் சாதத்தில் கொட்டி கலக்கவும்.பின்னர் மல்லித் தழையை தூவி இறக்கவும்.பன்னீர் புலாவ் ரெடி!

S.மேரி ரஞ்சிதம்,சிவகங்கை


Post Comment

Post Comment