தமிழர்களின் வீரமிக்க அடையாளம் இந்த நகரம் தான்!


Posted by-Kalki Teamதிரைப்படம்னாலும் சரி, தனியே திமிராக இருந்தாலும் சரி ஒருவித கம்பீரத்துடன் மதுரைக் காரன் என கெத்தாக சொல்ல, அந்த மதுரைக்கே கெத்து எது என தெரியுமா ?

தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிலேயே பழமையான நாகரீக நகம் என்றால் அது நம் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம் தான். உலகிலேயே மூத்த மொழி vன் தமிழ்மொழி என மார்தட்டி நிமிர்ந்து இன்று சொல்கிறோம் என்றால் அதற்கு மதுரையின் பங்கு மிக முக்கியமானது.

இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்து, இன்றும் செழித்த பூமியாக மதுரை காட்சியளிக்கிறது என்றால் அது நம் தமிழகத்திற்கும் பெருமை தானே. திரைப்படம்னாலும் சரி, தனியே திமிராக இருந்தாலும் சரி ஒருவித கம்பீரத்துடன் மதுரைக் காரன் என கெத்தாக சொல்ல, அந்த மதுரைக்கே கெத்து எது என தெரியுமா ?

மதுரை மீனாட்சி

மதுரை குறித்து பேசினாலும், எழுதினாலும் மீனாட்சி அம்மன் கோவிலை தவிர்த்து எதுவும் துவங்காது. பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டு இன்று மதுரையின் அடையாளமாக திகழும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிறப்புகள் பட்டியலில் அடங்காதவை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த மீனாட்சி அம்மன் நாடறிந்த பிரசித்தமான தலமாக இருந்திருப்பதை வரலாறறு ஆவனங்கள் மூலம் அறிய முடியும்.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு என்றவுடன் காளையும், விளையாட்டும் நினைவுக்கு வருகிறதோ இல்லையோ, போராட்டம் முதலில் நினைவுக்கு வந்துவிடும். அத்தகைய மாபெரும் போராட்டத்திற்கு வித்திட்ட ஜல்லிக்கட்டு என்னும் வீரவிளையாட்டுக்கு உலகம் அறிந்த நகரம் மதுரை தான். முன்னொரு காலத்தில் விவசாயத்தை முக்கிய ஆதாரமாகக் கொண்டு செயல்பட்ட மதுரையில் பொங்கல் பண்டிகை காலங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு உலகம் அறிந்த தமிர்களின் வீர விளையாட்டு. இதனைக் காணவே பண்டிகை காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் மதுரைக்கு படையெடுப்பது வழக்கம்.

கள்ளழகர்

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்து பிரசிதிபெற்ற ஆன்முகத் திருத்தலம் கள்ளழகர் கோவில். இக்கோவிலில் முக்கிய தெய்வமாக கருதப்படும் பரமஸ்வாமி சிலையும், சுந்தரராஜ பெருமாளான கள்ளழகர் சிலையும் தங்கத்தினால் செய்யப்பட்டது. பழங்கால கலைநயத்துடன் வீற்றுள்ள இத்தலத்தில் ஆண்டாள் ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து தன் தந்தை பெரியாழ்வாருடன் வந்து பெருமானை தரிசித்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

கள்ளழகர் மலை

கள்ளழகர் கோவிலின் அருகிலேயே 300 மீட்டர் உயரமுள்ள மலை ஒன்றும் உள்ளது. இங்கே சிலம்புரு கங்கை, நுபுரு கங்கை என இரு அருவிகள் பயணிகளை ஈர்க்கும் அம்சமாக உள்ளன. மகாவிஷ்ணு மனித உருவமாக திரிவிக்ரமர் அவதாரம் எடுத்தபோது அவருடைய பாதங்களிலிருந்து இந்த அருவிகள் உருவானதாக ஓர் புராணக் கதையும் உண்டு.

தமிழ் மரபுச் சுற்றுலா

என்னதான் தொழில்நுட்பம், அறிவியல் வளர்ச்சிகள் இந்நகரில் அடைந்திருந்தாலும், இன்றும் தன்னளவில் தமிழ் பண்பாட்டு மரபுகள் பாரம்பரியம் மாறாமல் பாதுக்காப்பாகவே உள்ளது. தமிழ் மீது ஆர்வம் கொண்டோர், இதுவரை மதுரைக்கு பயணம் செய்யாதோர் வாழ்நாளில் ஒருமுறையேனும் இங்கே வந்தால் சுற்றியுள்ள தமிழ் வளர்த்த சங்ககால தலங்களை தரிசிக்க தவறக்கூடாது.

எஸ்ஸார்Post Comment

Post Comment