கேரளா ஸ்பெஷல் அரவணப் பாயாசம் :


Posted by-Kalki Teamகேரளா கோயில்களில் வழங்கப்படும் பிரத்யேகப் பிரசாதம், இந்தப் பாயாசம். இந்த அரவணப் பாயாசத்தை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

புழுங்கலரிசி - 200 கிராம் (சின்ன அரிசியாக இருக்க வேண்டும்)

வெல்லம் - 1 கிலோ

தண்ணீர் - தேவையான அளவு

நெய் - 250 மில்லி

ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன்.

செய்முறை :

புழுங்கலரிசியை தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

வடிகட்டிய பாயாசத்தை அடுப்பில் வைத்து பாகாகக் காய்ச்சவும்.

இத்துடன் அரிசியைச் சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் கிளறி விடவும்.. அதிகம் குழையாமலும், அதிகம் வெந்து போகாமலும் பார்த்துக்கொள்ளவும்.

அரிசி உடைய ஆரம்பிக்கும் போது நெய்யை ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பார்ப்பதற்கு வேகாதது போல இருக்கும் இந்தப் பாயசம் சாப்பிடும் போது கரகரவென்றிருக்கும்.

சூப்பரான அரவணப் பாயாசம் ரெடி.


Post Comment

Post Comment