துல்கர் சல்மான் பிடிக்கும், அவருக்கு பிடிச்ச ஏரியா எது தெரியுமா ?


Posted by-Kalki Teamதமிழக இளைஞர்களால் பெரிதும் ரசிக்கப்படும் துல்கர் சல்மானுக்கு பிடித்த பிரபல சுற்றுலாத் தலங்கள் எதுன்னு உங்களுக்குத் தெரியுமா ?

மலையாள கதாநாயகரான துல்கர் சல்மான் தமிழகத்திலும் புகழ்பெற்ற நடிகர் தான். மலையாளத்தில் எந்தளவிற்கு இவரது படம் வெற்றி பெருகிறதோ அந்த அளவிற்கு தமிழ்நாட்டிலும் துல்கரின் படம் வெற்றிகளைக் குவிக்கும். குறிப்பாக, இவர் நடித்த தமிழ் படங்களைக் காட்டிலும் சார்லி, பெங்களூர் டேஸ் போன்ற படங்கள் பிரபலமாக ரசிக்கப்பட்டது. இப்படி, தமிழக இளைஞர்களால் பெரிதும் ரசிக்கப்படும் துல்கருக்குப் பிடித்த பிரபல சுற்றுலாத் தலங்கள் எதுன்னு உங்களுக்குத் தெரியுமா ?

இமயமலைத் தொடர் :

என்னங்க, இவரும் இமயமலைக்கு போறாரா ?. அட ஆமாங்க. துல்கர் சல்மானுக்கு பிடிச்ச முதல் சுற்றுலாத் தலமே இமயமலை தானாம். ஆனா, அவர மாதிரி அடிக்கடி எல்லாம் இல்லைங்க, வருடத்திற்கு ஒருமுறை அதுவும் நேரமும், காலமும் ஒருசேர நன்றாக இருந்தால் மட்டுமே இமயமலைக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் நம்ம துல்கர். இங்குள்ள, மலைக் கிராமங்களும், ரிசார்ட்டுகளுமே இவருக்கு பிடித்த தலமாக உள்ளது. மத்தபடி, தியானமெல்லாம் இல்லை என்கின்றனர் விசயம் தெரிந்தவர்கள்.

ஹிமாச்சலப் பிரதேசம்

வடமாநிலமான ஹிமாச்சல பிரதேசத்திற்கு வருடம் முழுவதும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள டிரெக்கிங் பகுதிகள், மீன்பிடி பகுதிகள், படகுப் பயணம், பனிச்சறுக்கு, பாராகிளைடிங், கோல்ஃப் என்று எண்ணற்ற சுற்றுலா அம்சங்கள் துல்கருக்கும் பிடித்த பகுதியாக உள்ளது. குறிப்பாக, மணாலி, தர்மசாலா, காசோல் உள்ளிட்ட பகுதிகள் பிடித்தமான தலங்களாகும்.

லே லடாக்

பனியால் மூடப்பட்ட இமாலய சிகரங்கள் லேவின் அழகை வசீகரிக்கிறது. சாகசம் விரும்பும் பயணிகள், கரடுமுரடான நிலப்பகுதிக்கு ட்ரெக்கிங் செல்வதன் மூலம் இவ்விடத்தின் இயற்கை அழகை ஆழ்ந்து அனுபவிக்க முடியும். லடாக்கில் உள்ள அழகிய ஏரிகளும் மடங்களும், மதி மயக்கும் இயற்கை காட்சிகளும் மலை உச்சிகளும் துல்கருக்கும் விருப்பமான பகுதியாக உள்ளது.

கார்பெட் தேசிய பூங்கா

ராம்கங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ள கார்பெட் தேசிய பூங்கா இயற்கை எழிலுக்காகவும், சாகசப் பயணங்களுக்காகவுமே சுற்றுப்பயணிகளை ஈர்க்கிறது. துல்கர் சல்மானுக்கு பிடித்தமான இந்திய சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இந்த கார்பெட் தேசிய பூங்காவும் ஓர் முக்கிய இடத்தில் உள்ளது.

மேகாலயா

இயற்கை அழகு மற்றும் கலாச்சாரம் என ஒட்டுமொத்த சுற்றுலா அம்சங்களைக் கொண்டுள்ள பகுதிதான் மேகாலயா. ஷில்லாங், ஜைன்டியா ஹில்ஸ், கரோ ஹில்ஸ் உள்ளிட்டவை பிரசித்தமான சுற்றுலாத் தலங்களாக இங்கே உள்ளன. அவற்றுள் துல்கருக்கும் பிடித்த தலமாக வாய்ப்பிருந்தால் வந்து செல்லும் தலமாக இவைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.Post Comment

Post Comment