விரைவில் இந்தியா வரும் இரண்டு சாம்சங் ஸ்மார்ட்போன்கள் :


Posted by-Kalki Teamசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ2 கோர் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் மற்றும் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் வெளியாக இருக்கின்றன.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் சில தினங்களில் வெளியாக இருக்கும் நிலையில், அந்நிறுவனத்தின் மேலும் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் வெளியாக இருக்கின்றன. கேலக்ஸி ஜெ2 கோர் சாம்சங் நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனாகவும், கேலக்ஸி ஏ8 ஸ்டார் மாடல் ஒன்றாக அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஜெ2 கோர் மற்றும் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகலாம் என கூறப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் முறையே SM-J260 மற்றும் SM-G8850 என்ற மாடல் நம்பர்களுடன் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.


Post Comment

Post Comment