கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் :


Posted by-Kalki Teamஇருபத்தேழு நட்சத்திரங்களில் மூன்றாவது இடத்தை பெறுவது கிருத்திகை நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரகாரர்களின் குணநலன்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

இருபத்தேழு நட்சத்திரங்களில் மூன்றாவது இடத்தை பெறுவது கிருத்திகை நட்சத்திரமாகும். இதன் அதிபதி சூரிய பகவானாவார் கிருத்திகை நட்சத்திரத்தின் 1-ம் பாதம் மேஷ ராசியிலும் 2,3,4 பாதங்கள் ரிஷப ராசியிலும் இருக்கும். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் 1-ம் பாதமானது தலை மற்றும் கண்களையும், 2,3,4-ம் பாதங்கள் முகம், கழுத்து, தாடை போன்ற பாகங்களையும் ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் அ,இ,உ,எ ஆகி யவை தொடர் எழுத்துக்கள் ஆ,ஈ ஆகியவை.

குண அமைப்பு :

கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு தோஷமில்லை. மற்ற இரண்டு பாதங்களில் பிறந்தவர்கள் வாழ்வில் சில இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இவர்களுக்கு நல்ல உடல் வலிமையும் புத்திசாலிதனமும் இருக்கும். குருட்டு தைரியத்துடன் சிலருக்கு தீயதை செய்தாலும் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும், எதையும் வெளிப்படையாக பேசும் குணமும் உண்டு. முன் கோபமும் அதிகமிருக்கும் ஆடம்பரமில்லாத வாழ்க்கையை வாழ விரும்புவர். தன் சக்திக்கு எது முடியுமோ அதையே செய்து முடிப்பர். கனவுலகத்தில் சஞ்சரிப்பதெல்லாம் இவர்களுக்கு பிடிக்காத விஷயம். தாய் மொழி மீதும், நாட்டின் மீதும் அதீத பற்றுடையவர்கள். சிரித்த முகத்துடன் இருந்தாலும் சண்டை பிரியர்கள். காரசாரமாக வாதிடுவார்கள்.

குடும்பம் :

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காதல் என்பது பிடிக்காத ஒரு விஷயமாகும். திருமண வாழ்கையிலேயே கராராக நடந்து கொள்வார்கள். மனைவி பிள்ளைகளிடம் கூட விட்டு கொடுத்து போக மாட்டார்கள் என்றாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் பல கனவுகளுடன் பிள்ளைகளை வளர்ப்பார்கள். அதீதமான தெய்வ பக்தியும் உண்டு. தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டு தனி வாழ்க்கையை வாழ்வார்கள் உணவு வகைகளை ரசித்தும் ருசித்தும் உண்பார்கள்.


Post Comment

Post Comment