மர்முகோ கோட்டைக்கு ஒரு அடிபொலி பயணம் போலாமா?


Posted by-Kalki Teamபோர்த்துகீசியர்களால் 1624-ஆம் ஆண்டு,கடல் சார் தாக்குதல்களை சமாளிப்பதற்காக கட்டப்பட்ட மர்ம கோவா கோட்டை 6 மைல்களில் பரந்து விரிந்து பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இந்தக் கோட்டை புகழ்பெற்ற ஸல்செட்டுக்கு

போர்த்துகீசியர்களால் 1624-ஆம் ஆண்டு,கடல் சார் தாக்குதல்களை சமாளிப்பதற்காக கட்டப்பட்ட மர்ம கோவா கோட்டை 6 மைல்களில் பரந்து விரிந்து பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இந்தக் கோட்டை புகழ்பெற்ற ஸல்செட்டுக்கு வடமேற்கு திசையிலும், மார்கோ மற்றும் வாஸ்கோடகாமா நகரங்களுக்கு மிக அருகிலும் அமைந்திருக்கிறது. இந்த கோட்டைக்கு ஒரு பயணம் செல்வோம் வாருங்கள்.

எங்குள்ளது?

டபோலிம் விமான நிலையத்தில் இருந் து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது இந்த கோட்டை. மேலும் இது வாஸ்கோ டா கா மா நகரத்திற்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது. அங்கிருந்து வெறும் 3 கிலோ மீட்டர் தொலைவு ஆகும். பனாஜியிலிருந்து 32 கிமீ தொலைவுக்கு பயணித்தால் இந்த கோட்டையை எளிதில் அடையலாம்.

எப்படி செல்வது

சொந்த வாகனத்தில் செல்கிறீர்களா? அல்லது பேருந்தில் செல்கிறீர்களா. பானாஜி அல்லது மார்கோவாவிலிருந்து நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடம்பா பேருந்து முனையத்தில் நீங்கள் இறக்கப்படுவீர்கள். இது வாஸ் கோ டா கா மா வின் முக்கிய பேருந்து நிலையம் ஆகும். வாஸ் கோ டா கா மாவிலிருந்து அடிக்கடி பேருந்துகள் இந்த கோட்டைக்கு செல்லும் இடத்துக்கு அருகில் வரை இயக்கப்படுகின்றன. சதா எனும் பேருந்து நிறுத்தத்தில் நீங்கள் இறக்கி விடப் படுவீர்கள் . அங்கிருந்து வெறும் 5 நிமிட நடை பய ண தூர த் தில் இந்த கோட்டையை அடை ய முடியும். நீங்கள் வாடகை கார்கள், பைக்கள் மூலமாகவும் இந்த இடத்தை அடையலாம்.

வரைபடம்

சென்னையிலிருந்து பெங்களூரு, ஹூப்பளி வழியாக கோவா மாநிலத்துக்குள் நுழையலாம். அங்கு முதலில் நம்மை வரவேற்பது மோலெம் எனும் பகுதி. பின் நெடுஞ்சாலை எண் 748ஐப் பின்தொடர்ந்து பிலியம், பிட்டோரா, போரிம் வழியாக கர்ட்டோலிமை அடையலாம். அங்கிருந்து இந்த கோட்டைக்கு செல்வது எளிது.

போர்ச்சுகீசியர்கள் வரலாறு

வரலாற்று முக்கியத்துவம் போர்த்துகீசியர்கள் தங்கள் கடல் எல்லையையும், மார்கோ துறைமுகத்தையும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு மர்ம கோவா கோட்டையை கட்டியுள்ளனர். இக்கோட்டையின் நுழைவாயிலில் டோம் ஃபிரான்சிஸ்கோடகாமா, ராஜா டோம் பிலிப் போன்ற போர்துகீசியர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

கல்வெட்டு குறிப்புகள்

கல்வெட்டுக் குறிப்புகள் அன்றைய வைஸ்ராயின் நினைவாக, கோட்டையின் திறப்பு விழாவின் போது செதுக்கப்பட்டுள்ளன. 1703-ஆம் ஆண்டு இந்தியாவின் அன்றைய போர்த்துகீசிய தலைநகரமாக இருந்த மார்கோ நகரத்துக்கு வந்தவர் இந்த வைஸ்ராய். மர்ம கோவா கோட்டையை கைப்பற்றுவதற்காக போர்த்துகீசியர்களை எதிர்த்து மராட்டியர்கள் பல முறை கடும் போர் செய்திருக்கின்றனர். இறுதியில் இந்தக் கோட்டை மராட்டியர்கள் வசம் சென்ற பின், பழைய கோவாவை மட்டும் போர்த்துகீசியகர்கள் தக்கவைத்து கொண்டனர்.

அமைப்புகளும் சுற்றுலாத் தகவல்களும்

மர்ம கோவா கோட்டையில் உள்ள படைக்கலக் கொட்டில், 20 கொத்தளங்கள், 5 சிறை அறைகள், கோட்டைக் காவலர்கள் தங்குமிடம் மற்றும் தேவாலயம் என்று அனைத்தும் இன்றும் சிறந்த முறையிலே பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் கோட்டையிலிருந்து கல்லெறியும் தூரத்திலேயே அமைந்திருக்கும் வர்கா பீச் மர பாரம்பரிய மீன்பிடி படகுகளுக்காக மிகவும் புகழ்பெற்றது.மர்ம கோவா கோட்டை வாஸ்கோடகாமா நகரிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதோடு, தபோலிம் விமான நிலையத்துக்கும் வெகு அருகில் உள்ளது. இதனால் பேருந்து, கார், பைக் என்று எந்த வாகனத்தின் மூலமும் சுலபமாக மர்ம கோவா கோட்டையை அடைந்து விடலாம். மேலும், இந்தக் கோட்டைக்கு சுற்றுலா வர கோடை காலமே சிறந்தது.Post Comment

Post Comment