வலம்புரி சங்கை பூஜித்து வந்தால் அஷ்ட ஐஸ்வர்யம் தரும் மகாலக்ஷ்மி வீட்டில் வாசம் செய்வாள் :


Posted by-Kalki Team



வலம்புரி சங்கு உள்ள வீட்டில் செல்வ வளம் மிகும். நிரந்தரமான மகிழ்ச்சி நிலைத்து நிற்கும். இப்படிப்பட்ட வலம்புரி சங்கு அனைவர் இல்லத்திலும் இருந்து செல்வ செழிப்பில் மக்கள் வாழ வேண்டும் என்பதற்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தி அளிக்கப்படுகிறது.

ஓம்கார பிரணவ மந்திரத்தால்தான் சகல உலகங்களும் இயங்குகிறது என்பதே வேதத்தின் சாரம். இதன் அடையாளமாக, புனிதப்பொருளாக வலம்புரிச் சங்கு கருதப்படுகிறது. பாற்கடலைக் கடைந்தபோது திருமகள் வெளியே வந்தபோது கூடவே தோன்றியது இந்தச் சங்கு. இதை எடுத்து தமது கரத்தில் தாங்கிக்கொண்டார் திருமால்.

வலம்புரி சங்கை நம் வீட்டில் வைத்து முறையாக பூஜித்தால், அஷ்ட ஐஸ்வர்யம் தரும் மகாலக்ஷ்மி வீட்டில் வாசம் செய்வாள் என வேதங்கள் கூறுகின்றது. கடலில் பிறக்கும் ஒரு சங்கில் சுருண்டிருக்கும் வரிகள் வாய்ப் பகுதியில் ஆரம்பித்து வலதுபுறமாக சுழன்று முடிந்தால், அது வலம்புரிச் சங்கு. காதில் வைத்துக் கேட்டால் அது ஓம் என்ற சப்தத்தை எழுப்பும். இதுவே அந்தச் சங்கு வழிபாட்டுக்குரியது என்பதைத் தெரிவித்து விடும்.

பூஜையில் ஒலிக்கவும், போரைத் தொடங்கவும், வெற்றியைப் பறைச்சாற்றவும், நல்லனவற்றின் வருகையை அறிவிக்கவும் ஆதிகாலம் தொட்டே சங்கு முழங்கப்பட்டு வந்துள்ளது. சங்கு எப்போதுமே புனிதப்பொருளாக இருந்து வந்துள்ளதைத் தமிழ் இலக்கியங்களும் சொல்லி வந்துள்ளன. இது மகாலக்ஷ்மியின் அம்சமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இது இருக்கும் இடத்தில் தோஷங்கள், துஷ்ட சக்திகள் இருக்கவே இருக்காது. கண்திருஷ்டி, பகைவர்களின் நீசச் செயல் எதுவுமே பலனிழந்து போகும். கடன் பிரச்சினை நீங்கும். வாஸ்து தோஷங்கள் யாவும் விலகும்.

தொழில் செய்யும் இடத்தில், பணம் புழங்கும் இடத்தில் இந்த சங்கு இருப்பது இன்னும் விஷேசமானது. சங்கு வைத்து செய்யப்படும் எந்தப் பூஜையும் நிறைவாகிறது. கணபதி, வலம்புரிச் சங்கு, சாளக்கிராமம், ருத்ராட்சம் இந்த நான்கும் இருக்கும் இடம் தெய்வ சந்நிதிக்கு நிகரானது என்பது ஆன்றோர்கள் வாக்கு.

இத்தகைய சிறப்பு மிக்க வலம்புரி சங்கை சிறப்பு வழிபாடுகள், பூஜைகளை எண்கணித மேதை பண்டிட் திரு.அசோக்பாரதி முன்னிலையில் வேத விற்பன்னர்கள் செய்து மக்கள் பயன்பாட்டிற்காக அளிக்கின்றனர். வலம்புரி சங்கு உள்ள வீட்டில் செல்வ வளம் மிகும். நிரந்தமான மகிழ்ச்சி நிலைத்து நிற்கும் என்பது உண்மையிலும் உண்மை.



Post Comment

Post Comment