சுகப்பிரசவம் அருளும் பகமாலினி மந்திரம் :


Posted by-Kalki Teamகர்ப்பத்திலுள்ள சிசு பாதுகாக்கப்பட்டு, சுகப்பிரசவம் ஏற்பட பகமாலினிக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் கர்ப்பிணிகள் சொல்லி வந்தால் வருவது நல்லது.

இந்த நித்யா தேவியின் மந்திரத்திலும், இவளின் பரிவார தேவதைகளின் மந்திரங்களிலும் ‘பக’ எனும் சப்தம் அடிக்கடி விடுவதால், இவள் பகமாலினி என்று அழைக்கப்படுகிறாள். ‘பகம்’ என்ற சொல்லுக்கு பரிபூரணமான ஐஸ்வரியம், தர்மம், தேஜஸ், ஞானம், வைராக்கியம், வீரியம், முக்தி என்றெல்லாம் பொரு ளுண்டு. முக்கண்களுடனும் இடது கரங்களில் அல்லி மலர், பாசக்கயிறு, கரும்பு வில் ஏந்தியும், வலது கரங்களில் தாமரை, அங்குசம், புஷ்ப பாணங்களை தரித்தும் தோற்றம் தரு கிறாள்.

மந்திரம்:

ஓம் பகமாலின்யை வித்மஹே

ஸர்வ வஸங்கர்யை தீமஹி

தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச துவிதியை, கிருஷ்ண பட்ச சதுர்த்தசி.

பலன்கள்: வாழ்வில் வெற்றிகளைக் குவிக்கலாம். கர்ப்பத்திலுள்ள சிசு பாதுகாக்கப்பட்டு, சுகப்பிரசவம் ஏற்படும்.


Post Comment

Post Comment