மாலை நேர டிபன் வெஜிடபிள் உருண்டை :


Posted by-Kalki Teamஉப்பு உருண்டை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இந்த உப்பு உருண்டையில் காய்கறிகள் சேர்த்து செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

அரிசி - 2 கப்,

கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி - தலா ஒரு கப்,

வெங்காயம் - 1,

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,

தேங்காய் துருவல் - கால் கப்,

காய்ந்த மிளகாய் - 3,

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,

கடுகு - அரை டீஸ்பூன்,

உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு ஸ்பூன்,

எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசியை மிக்ஸியில் ரவை போல உடைத்து கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லி, கேரட், பீன்சை பொடியாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு. கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், பீன்ஸ் சேர்த்து, பச்சைப் பட்டாணியையும் சேர்த்து வதக்கி, ஒரு கப் அரிசிக்கு இரண்டரை கப் என்ற அளவில் தண்ணீர் விட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

இதில் தேங்காய் துருவல், அரிசி ரவை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, ஆறியதும் சின்ன உருண்டைகளாக பிடித்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

இப்போது சுவையான சத்தான வெஜிடபிள் உருண்டை ரெடி.


Post Comment

Post Comment