சத்தான டிபன் கோதுமை பிரட் உப்புமா :


Posted by-Kalki Teamகோதுமையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கோதுமை பிரட்டை வைத்து சத்தான சுவையான உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

கோதுமை பிரட் துண்டுகள் - 6

தக்காளி - 1

லெமன் ஜூஸ் - 2 மேஜைக்கரண்டி

தண்ணீர் - 100 மில்லி

மிளகாய் தூள் - சிறிதளவு

கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி,

கொத்தமல்லித்தழை - சிறிது

உப்பு - தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - சிறிய துண்டு

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

கோதுமை பிரட் துண்டுகளின் ஓரங்களை கட் பண்ணி எடுத்து விடவும். பிறகு பிரட்டை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

தக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்த பின்னர் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு சுருள வதங்கியதும் அதனுடன் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மற்றும் பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.

இறுதியில் லெமன் ஜூஸ், கொத்தமல்லித்தழையும் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

சுவையான கோதுமை பிரட் உப்புமா ரெடி.


Post Comment

Post Comment