கட்சி தலைமை அலுவலகத்தில் கொடியேற்றினார் கமல் - துணைத்தலைவராக கு.ஞானசம்பந்தன் நியமனம் :

Posted by-Kalki Team

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தின் கட்சியின் கொடியை கட்சியின் தலைவர் கமல் ஹாசன் இன்று ஏற்றி வைத்து புதிய நிர்வாகிகளை அறிவித்தார்.

நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது. அங்கீகாரம் பெற்றபின், முதல் கொடியேற்று விழா இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

விழாவில் கட்சி தலைவர் கமல் கலந்துகொண்டு கொடியை ஏற்றி வைத்து பேசினார்.

முன்னதாக, கட்சியின் புதிய நிர்வாகிகளை கமல் அறிவித்தார். அப்போது, கட்சியின் துணைத்தலைவராக கு.ஞானசம்பந்தன், செயலாளராக அருணாச்சலம், பொருளாளராக சுகா நியமிக்கப்பட்டிருப்பதாக கூறினார். செயற்குழு உறுப்பினர்களாக கமீலா நாசர், மெளரியா, பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கீகாரம் பெற்ற பின் முதல் முறையாக கொடியேற்று நிகழ்ச்சி நடந்ததால், ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர்.






Follow us at: