அவள்


Posted by-Kalki Teamமின்னலென பளிச்சிடும்

முகத்தாள் அவள் -அவள்

முகத்தில் அத்தனை வசீகரம்

இதுவே அவளை நான் பார்த்த

முதல் பார்வை ;அவள் பார்வை

என் பார்வையில் சங்கமிக்க

சில நொடிகள் என் இமைகளை

மூடவைத்தது -மூடிய என் இமைகள்

திறந்து கொண்டு அவள் முகத்தை

மீண்டும் பார்க்க ,அவள் தேன் கிண்ண

இதழ்கள் செவ்வரளிப்பூப்போல் அலர்ந்திட

வெண் முத்துக்களாய் தெறித்தது அவள்

சிரிப்பு அது கடலலைபோல்

என்னைத் தன்னுள் இழுத்துக்கொண்டது

அவள் சிரிப்பின் அடிமை நான் இப்போது ...Post Comment

Post Comment