கழுத்துக்கு வலிமை தரும் பர்வதாசனம் :


Posted by-Kalki Teamபர்வதா என்றால் மணல் என்று பொருள். இந்த ஆசன நிலையில் உடல் அமைப்பு மலைபோல் இருப்பதால் பர்வதாசனம் என அழைக்கப்படுகிறது.

பெயர் விளக்கம்: ‘பர்வதா’ என்றால் மணல் என்று பொருள். இந்த ஆசன நிலையில் உடல் அமைப்பு மலைபோல் இருப்பதால் பர்வதாசனம் என அழைக்கப்படுகிறது.

செய்முறை: சூரியநமஸ்காரத்தின் ஏழாம் நிலையிலிருந்து பிருஷ்டத்தை (புட்டத்தை) உயர்த்தி (படத்தில் உள்ளது போல்) மார்பையும், தலையையும் உள்நோக்கி கொண்டு வந்து தலை, மார்பு கீழ்நோக்கியபடி வைக்கவும். முழங்கால் முழங்கை மூட்டுகளை மடக்காமல் வைக்கவும். உள்ளங்கை, உள்ளங்கால்களை தரையில் பதிக்கவும். மூச்சை வெளியே விடவும்.

மந்திரத்தைக்கூறி சக்கரத்தை மனதால் நினைக்கவும்.

கவனம் செலுத்த வேண்டிய இடம்: உடலை தளர்வாக வைத்து கொள்வதின் மீதும், விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

பயிற்சிக் குறிப்பு: இந்த ஆசன நிலை ‘க்ஷி’ என்ற ஆங்கில எழுத்தின் தலைகீழ் நிலை போல் வர வேண்டும். ஆரம்பப் பயிற்சியில் பாதங்களை தரையில் ஊன்றி வைப்பது சிலருக்கு கடினமாக தோன்றலாம். அத்தகையவர்கள் முடிந்தவரை செய்து வந்தால் தொடர்ந்து பயிற்சியில் கால் நரம்புகளில் வளையும் தன்மை அதிகரித்து சரியான தோற்றம் வந்து விடும்.

பயன்கள்: கை, கால் விரல்கள் மற்றும் தசைகள், மணிக்கட்டுகள், கணுக்கால் மற்றும் குதிகால் நரம்புகள், கழுத்து வலிமை பெறும்.


Post Comment

Post Comment