நடராஜமூர்த்தியைப் போற்றும் மஹா மந்திரம் :


Posted by-Kalki Teamஇது பூலோக கைலாசமான விளங்கும் சிதம்பரத்தில் ஆனந்த நடனமாடும் நடராஜமூர்த்தியைப் போற்றும் மஹாமந்திரம். இந்த மந்திரம் விசேஷமாக பேரின்ப நிலையை அளிக்கும்.

இதம் கமலஸுந்தரம் ஸதஸி காஞ்சநே ந்ருத்யத:

ஸதஞ்சித முதஞ்சிதம் கிமபி குஞ்சிதம் சஞ்சலம்

விசிந்த்ய சிதம்பரே ஹ்ருதயஸம்பதே ஸாஸ்வதம்

விரிஞ்சகரகந்துகம் சரணமிந்து சூடாமணே:

ஸிவ ஸிவ சரணம் ஸிவானந்தம் ஸிவ ஸிவ ஸிவாய ஸிவாய நமஹ

- சிதம்பர பஞ்சாக்ஷர மந்திரம்

பொதுப் பொருள்: இது பூலோக கைலாசமான விளங்கும் சிதம்பரத்தில் ஆனந்த நடனமாடும் நடராஜமூர்த்தியைப் போற்றும் மஹாமந்திரம். அவர் தன் குஞ்சிதபாதத்தைத் தூக்கி நடனமிடும் காட்சி அற்புதமானது. பொன்னம்பலத்தில் உலகை இயக்குவதற்காக அவர் ஆனந்த திருநடனம் புரிகிறார். சிவ எனும் இரண்டெழுத்து மந்திரம் நம் பாவங்களை நீக்கி புண்ணியத்தை அளிக்கவல்லது. இம்மந்திரத்தில் ஏழு முறை சிவ நாமம் உச்சரிக்கப்படுகிறது. இந்த மந்திரம் வாழ்க்கையில் அடியார்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு, எனும் பிறவிப்பயனை அளிக்கவல்லது. மேலும் இந்த மந்திரம் விசேஷமாக பேரின்ப நிலையை அளிக்கும்.


Post Comment

Post Comment