இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் திரிஷா :


Posted by-Kalki Teamநாயகி, மோகினி, கர்ஜனை என ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் திரிஷா தற்போது விஜய் சேதுபதியுடன் 96 படத்தில் நடிக்கிறார். காதல் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தை பிரேம்குமார் இயக்குகிறார். ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளராக இவர் பொறுப்பேற்றிருந்தார். இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

16 வயது இளைஞன், 36 வயது வாலிபன், 96 வயது முதியவராக வித்தியாசமான தோற்றத்தில் இதில் நடிக்கிறார் விஜய் சேதுபதி.

தனக்கு ஜோடியாக நடிக்கும் திரிஷாபற்றி விஜய் சேதுபதி கூறும்போது,படப்பிடிப்பு நடக்கும் ஒவ்வொரு நாளும் திரிஷா சரியான நேரத்துக்கு வந்துவிடுவார்.

அவரது கவனம் முழுவதும் அதில்தான் இருக்கும். கேரக்டரை புரிந்துகொண்டு அதற்கு என்ன தேவையோ அந்த நடிப்பை தருவார். தொழில்முறையில் அவர் மிகவும் அர்ப்பணிப்பான நடிகை என்றார். இப்படத்தில் நடிப்பதுபற்றி திரிஷா கூறும்போது,96 படத்தில் நான் ஏற்றிருக்கும் வேடம் இதுவரை எந்தவொரு படத்திற்காகவும் நான் முயற்சிக்காத கதாபாத்திரம் ஆகும் என்றார்.Post Comment

Post Comment