யோகா பக்க விளைவுகள் இல்லாத ஒரு சிகிச்சை :


Posted by-Kalki Teamஉடல் எடையை குறைக்க உணவுக்கட்டுப்பாட்டுடன் தினமும் யோகப்பயிற்சிகளை செய்து வருவது பக்க விளைவுகள் இல்லாத, அதிகப் பணச் செலவு இல்லாத ஒரு சிறந்த வழியாக உள்ளது.

தற்காலத்தில் உடல் பருமனை குறைக்க உலகெங்கும் பல்வேறு சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றன. உடலில் கொழுப்பு அதிகமாக சேர்ந்துள்ள இடங்களில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்றுதல், ஹைபோதாலமஸின் திருப்தி மைய கட்டுப்பாடு சிதறா வண்ணம் இருக்க சிலவகை மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது, குடலை சுருங்கச் செய்து குறைந்தளவு உணவை சாப்பிடச் செய்தல், சுரப்பிகளை கட்டுப்படுத்துதல், பசி அதிகம் உண்டாகாமல் இருப்பதற்கான மருந்துகளை உட்கொள்ளுதல் போன்ற பலவிதமான சிகிச்சை முறைகள் உடல் பருமனை குறைக்க உள்ளன.

உடல் பருமனே பல நோய்கள் உண்டாவதற்கு காரணம் என்பதை மக்கள் உணரத் தொடங்கிய நிலையில் - பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் உடலை இளைக்கச் செய்வதற்கான விளம்பரங்களும் அதிகரித்து உள்ளன.

ஒருவர் உடல் பருமனை குறைப்பதற்கான விளம்பரங்களை பார்த்து மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவது மிகவும் தவறான செயலாகும். உடல் எடை கூடுகிறதென்றால் அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றை முறையாக ஒரு மருத்துவரின் மூலம் அறிந்து, அதற்கு ஏற்ப சரியான மருந்துகளை சாப்பிடுவது நல்லது.

பொதுவாக உடல் எடையை குறைக்க உணவுக்கட்டுப்பாட்டுடன் தினமும் யோகப்பயிற்சிகளை செய்து வருவது பக்க விளைவுகள் இல்லாத, அதிகப் பணச் செலவு இல்லாத ஒரு சிறந்த வழியாக உள்ளது.

உடல் எடையைக் குறைக்க ஆசனங்களுள் சூரிய நமஸ்காரம் சிறந்த பயிற்சி ஆகும். பிராணாயாமத்தில் சூரிய நாடியை நன்கு இயங்கச் செய்து (வலது நாசியில் மூச்சை அதிகமாக இயங்கச் செய்து) தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, உடலை லேசாக்கி சுறுசுறுப்புடன் செயல்படச் செய்கிறது.

ஹைபோதாலமஸில் உள்ள உணவு மையம், திருப்தி மையம் கட்டுப்பாடுடன் செயல்பட சிரசாசனம், சர்வாங்காசனம் போன்ற ஆசனப்பயிற்சிகளும், நாடி சோதனா போன்ற பிராணாயாம பயிற்சிகளும் தியானமும் உதவுகிறது.

தைராய்டு கோளாறினால் வரும் உடல் பருமனை குறைக்க சர்வாங்காசனம், ஹலாசனம், சிவலிங்காசனம் போன்ற ஆசனப்பயிற்சிகள் உதவுகிறது.

மருந்து, மாத்திரைகளினால் உடலில் உண்டான கழிவுகளை அகற்ற பிராணாயாமமும், கிரியா பயிற்சிகளும் பயன்படுகிறது.


Post Comment

Post Comment