அஜித்திடம் பிடித்தது அதுதான் - அருண் விஜய்


Posted by-Kalki Teamநடிகர் அருண் விஜய், தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் பலர் அஜித், விஜய் பற்றி கேள்வி கேட்டதற்கு மிகவும் சுவாரஸ்யமாக பதில் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் திறமைகள் இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காமல் பலர் தளர்ந்து போயிருக்கிறார்கள். அதில் ஒரு சிலர் மட்டுமே கடின உழைப்பு மூலம் உழைத்து வருகிறார்கள். அப்படி திறமைகள் இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்தவர் நடிகர் அருண் விஜய்.

இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும், அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்த பிறகுதான் ரசிகர்களிடையே மிகவும் பரிச்சையமானார். தற்போது சிறந்த கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவர் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்திருக்கிறார். அதில், நடிகர் அஜித்துடம் மீண்டும் வில்லனாக நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, தெரியல. மீண்டும் அமையும் என்று நம்புகிறேன். அதைத்தான் நானும் விரும்புகிறேன்’ என்றார்.

விஜய்யை பற்றி சொல்லுங்கள்?

அற்புதமான மனிதர். அவருடைய எனர்ஜி ரொம்ப பிடிக்கும்.

அனுஷ்கா பற்றி?

ஸ்வீட்டி

என்னை அறிந்தால் 2 உருவாகுமா?

நானும் அதைத்தான் எதிர்ப்பார்க்கிறேன்.

அஜித்திடம் உங்களுக்கு பிடித்தது?

அவருடைய பேச்சும், பெருந்தன்மையும்.

செக்கச் சிவந்த வானத்தில் சிம்புடன் நடித்திருக்கிறீர்களா?

ஆமாம். நாங்கள் இருவரும் இணைந்து நடித்திருக்கிறோம்.

உங்களுடைய அடுத்த படம் எப்போது?

தடம் திரைப்படம் ஜூலையில் வெளியாக இருக்கிறது.

2018ல் உங்களை கவர்ந்த படம்?

கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ (மகாநடி)

தனுஷ் பற்றி?

திறமையானவர். வலிமையுடன் நடிப்பார்.

விஜய் சேதுபதி பற்றி?

இயற்கையானவர்

இவ்வாறு ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.


Post Comment

Post Comment