மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி :


Posted by-Kalki Teamராஜுவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் `சர்வம் தாள மயம் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் நிலையில், `மெர்சல் அரசன் படத்திற்கு பிறகு ரகுமான் இசையில் பாடியிருப்பதாக ஜி.வி.பிரகாஷ் கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடைசியாக வெளியான செம படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்ததாக குப்பத்து ராஜா, 4ஜி, ஐங்கரன், அடங்காதே, 100% காதல், சர்வம் தாள மயம், ஆதிக்குடன் ஒரு படம், ரெட்ட கொம்பு, கருப்பர் நகரம், இயக்குநர் விஜய்யுடன் ஒரு படம் என பல படங்கள் உருவாகி வருகின்றன.

இதில் ராஜுவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் `சர்வம் தள மாயம் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தில், `மெர்சல் அரசன் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு குத்துப் பாடலை தான் பாடியிருப்பதாக ஜி.வி.பிரகாஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் கூறியிருப்பதாவது,

` சர்வம் தாள மயம் படத்தில் `மொசார்ட் ஆஃப் இந்தியா ஏ.ஆர்.ரகுமானின் இசையில் அறிமுக பாடலை பாடியதில் அதீத மகிழ்ச்சி அடைகிறேன். `ஊர்வசி ஊர்வசி பாடலுக்கு பிறகு ஒரு `தர லோக்கல் பாடலாக இது இருக்கும். `மெர்சல் அரசன் பாடலுக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் இசையில் `பீட்டர் ஃபீட்ட ஏத்து என தொடங்கும் இந்த பாடலை பாடியிருக்கிறேன். இது இளைஞர்களின் அன்ந்தமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக `8 தோட்டாக்கள் படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மைண்ட்ஸ்கிரீன் சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ரவி யாதவ் ஒளிப்பதிவு பணிகளையும், அந்தோணி படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.


Post Comment

Post Comment