குஜராத்தி ஸ்டைல் ஸ்வீட் மாங்காய் ஊறுகாய் :


Posted by-Kalki Teamமாங்காய் ஊறுகாயை பல்வேறு முறைகளில் தயாரிக்கலாம். இன்று குஜராத்தி முறையில் இனிப்பு சேர்த்து ஊறுகாய் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மாங்காய்த் துருவல் - 2 கப்,

சர்க்கரை - ஒன்றரை கப்,

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,

சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,

பட்டைத்தூள், லவங்கத்தூள் - தலா கால் டீஸ்பூன்,

மிளகாய்த்தூள், உப்பு - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை :

மாங்காய்த் துருவலுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு மணி நேரம் மூடி வைக்கவும். (மாங்காயில் சிறிதளவு தண்ணீர் விட்டிருக்கும்).

அதனுடன் சர்க்கரை, மிளகாய்த்தூள், சீரகத்தூள், பட்டைத்தூள், லவங்கத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி மெல்லிய துணியால் மூடி வெயிலில் வைக்கவும் (ஏழு நாள்கள் வெயிலில் வைக்கவும்). காலையும் மாலையும் ஊறுகாயை நன்றாகக் கிளறிவிடவும்.

சர்க்கரைப்பாகு இரண்டு கம்பிப் பதம் வந்தவுடன் வெயிலில் வைப்பதை நிறுத்திவிடவும்.

சூப்பரான ஸ்வீட் மாங்காய் ஊறுகாய் ரெடி.

மற்றொரு முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து மிதமான தீயில் வைத்து இரண்டு கம்பிப் பதம் பாகு வரும் வரை கிளறி இறக்கவும். இந்த ஊறுகாயைச் சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொள்ளலாம்.


Post Comment

Post Comment