வாஸ்து சாஸ்திரம் சொல்லும் உண்மை :


Posted by-Kalki Teamவாஸ்து சாஸ்திரம்" என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும்.

* வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கையை ஒற்றைப் படையில் அமைக்க வேண்டும்.

* வீட்டுக்கு காலியிடம் அமைக்க வேண்டும் என்றால், மனைக்கு வடக்கிலும் கிழக்கிலும் அமைக்க வேண்டும்.

* கழிவு நீரை வீட்டிற்கு கிழக்கு அல்லது வடக்கில் வெளியேறுமாறு அமைக்க வேண்டும்.

* வாசல்படிகள் ஒற்றைப் படையில் அமைய வேண்டும். மேற்கிலிருந்த கிழக்கு நோக்கியோ, தெற்கிலிருந்து வடக்கு நோக்கியோ ஏறுமாறு அமைக்க வேண்டும்.

* மாடியை வடக்கிலோ, கிழக்கிலோ கட்டவும், மாடிப்படி வ-டக்கு நோக்கி ஏறும்படியோ, கிழக்கு நோக்கி ஏறுமாறோ அமைக்க வேண்டும்.

* கிணறு, போரிங், நீர்த்தொட்டி முதலியவற்றை கிழக்கிலோ, மேற்கிலோ அமைக்கவும்.

* கழிவறை வடக்கு பார்த்து அமரும்படி அமைக்க வேண்டும். ஈசான்ய மூலையில் கழிவறை அமையக்கூடாது.

* மாணவர்கள் கிழக்கு நோக்கி உட்கார்ந்து படித்தால் கல்வி சிறக்கும்.

* வியாபார ஸ்தலத்தில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமரவும்.

* இரும்பு பெட்டி, பீரோ முதலியவற்றை தென்மேற்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கி நோக்கி வைக்க வேண்டும். செல்வம் நிலைத்திருக்கும்.

* வியாதிஸ்தர்களை வீட்டின் தென்மேற்கு அறையில் தெற்கில் தலை வைத்து படுக்க வைத்தால் நோய் குணமாகும்.

* தண்ணீர் தொட்டி வீட்டின் கன்னி மூலையில் மாடியில் அமைக்க வேண்டும்.

* வீட்டில் பாகப்பிரிவினை செய்தால், மூத்தவர்களுக்கு மேற்கு அல்லது தெற்குப் பகுதியை கொடுக்க வேண்டும். இளையவர்களுக்கு கிழக்கு அல்லது வடக்கு பகுதியை கொடுக்கவும்.

* வீட்டின் அருகில் மாமரம், வாழை மரம், வேப்ப மரம், எலுமிச்சை, மல்லிகைச் செடியை வளர்க்கலாம்.

* ஆலமரம், பனைமரம், எருக்கு, எட்டி மரம், வில்வ மரம், முருங்கை மரம், பப்பாளி, அகத்திச்செடி, இலுப்பை மரம் வளர்க்கக் கூடாது.

* வெளியில் இருக்கும் ரோடு மட்டத்தை விட வீட்டுக்கு தளம் உயரமாக இருக்க வேண்டும்.

* திருமணமாகாத பெண்களை வீட்டின் வடமேற்கு அறையில் படுக்குமாறு செய்தால், விரைவில் திருமணம் கூடி வரும்.


Post Comment

Post Comment