சின்ன பட்ஜெட்டுக்கு ஏற்ற பெரிய மலைகள்..!


Posted by-Kalki Teamநம் நாட்டில் மேற்கு, கிழக்கு, வடக்கு என பெரும்பகுதி மலைப் தொடர்களை எல்லையாகக் கொண்டுள்ளது. இதில், மேற்குத் தொடர்ச்சி மலை மிக நீளமானதும், உலகிலேயே உயர்ந்த மலை என்ற பெருமையை வடக்கே இமயமலைத் தொடரும் பெற்றுள்ளது. இதில் பெரும்பகுதி பாதுகாக்கப்பட்ட, அல்லது ஆபத்துகள் நிறைந்த பகுதியாகவும், சிலவை சுற்றுலாத் தலங்களில் பிரசிதிபெற்றதாகவும் உள்ளது. உதாரணத்திற்கு இமயமலையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிகரங்கள் உள்ளன. இதில், சோப்தா, ஆலி, பஹல்கம், லே என சுற்றுலாத் தலங்களின் பட்டியல் நீளும். மேற்கே ஊட்டி, ஆனைமுடி, வால்பாறை என ஏராளமான தலங்கள் உள்ளது. இவற்றுள், உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளால் அதிகம் பயண்படுத்தப்படாத, மேலும், தனது இயற்கைப் பொழிவை அப்படியே பாதுகாத்து வைத்திருக்கும் மலைச் சுற்றுலாத் தலங்களும் இங்கு ஏராளமாக உள்ளன. மேலும், இத்தலங்கள் அனைத்தும் குறிப்பிடத்தக்க பட்ஜெட்டிலேயே சென்று வரும் வகையில் அமைந்துள்ளது. சரி, குறிப்பிடத்தக்க சில மலைப் பிரதேசங்களுக்கு மட்டும் சின்னதாக சுற்றுலாச் சென்று வரலாமா...

மேகமலை

தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்களால் நிறைந்து காணப்படும் மலைத்தொடர்தான் இந்த மேகமலை. இந்த மலைப்பகுதியின் பெரும்பாலான பகுதிகள் இன்னமும் சேதப்படாத பசுமை மாறாக் காடுகளாகவே உள்ளன. ஓங்காரமாய் வீசும் காற்று, மேகமலை நீர்வீழ்ச்சி, சுருளி நீர்வீழ்ச்சிகளின் தாயகம் இதுதான். பசுமைப்போர்த்திய புல்வெளிகள், பச்சைப்பசேலேன்ற தோட்டங்கள் என மேகமலையில் எங்கு காணினும் பச்சைப் போர்வை விரித்துவைத்தது போலத்தான் இருக்கும்.

தாரிங்பாடி

தமிழகத்தில் எப்படி ஊட்டி மலைத் தொடர் சுற்றுலாப் பயணிகளை வருடந்தோரும் ஈர்க்கும் வல்லமை கொண்டுள்ளதோ அதேப் போன்றுதான் ஒடிசாவில் உள்ள இந்த தாரிங்பாடி மலைத் தொடரும். விசாகப்பட்டிணத்தில் இருந்து இந்த மலைத் தொடரை எளிதில் அடையலாம். கந்தமல் மாவட்டத்தில் உள்ள இந்த மலைப்பிரதேசம் பல அடந்த காடுகளை உள்ளடக்கியது. நான்கு அல்லது இரண்டு சக்கர வாகனத்தில் இந்த மலைத் தொடரில் பயணம் செய்வது அத்தனை அம்சமாக இருக்கும். தாரிங்பாடியில் உள்ள சமவெளிப் பகுதிகள் வாகனத்தில் இருந்தபடியே வன விலங்குகளைக் கண்டுரசிக்க உதவும். இங்குள்ள பள்ளத்தாக்குகளில் உரசிவரும் காற்றில் வீசும் காபி வாசனை மனதை இலகச் செய்து உற்சாகப் படுத்தும்.

லம்பாஸ்கினி

ஆந்திராவில் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலமாக இது இல்லாவிட்டாலும், ஒருவித இனிமையான பயண அனுபவத்தை தரக்கூடியது இந்த லம்பாஸ்கினி மலைப் பிரதேசம். காக்கிநாடாவில் இருந்து 134 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டிணத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள இந்த மலைத் தொடரை அடைய பேருந்து வசதிகள் உள்ளது. உள்ளூர் மக்களால் சின்ன காஷ்மிர் என செல்லமாக அழைக்கப்படும் இங்கு இயற்கை எழில் சூழ்ந்த நிலையில் சிறிய மலைக் கிராமமும் உள்ளது.

பஞ்சாங்கி

மகாராஸ்டிராவில் உள்ள இந்த பஞ்சாங்கி மலைப் பிரதேசம், அனுபவம் மிகுந்த மலையேறிகள் மற்றும் புதியவர்கள் அனைவருக்கும் ஏற்ற வகையில் மலையேற்றப்பாதைகளைக் கொண்டுள்ளது. இங்குள்ள காட்சி முனைகளும், பணி படர்ந்த காட்சிகளும் நிச்சயம் உங்களை பரவசமடையச் செய்திடும்.

உங்கள் துணைவியுடன் இத்தலத்திற்குச் சென்றுள்ளீர்கள் என்றால் வாழ்நாளில் மறக்க முடியாத அளவில் பல்வேறு நினைவுகளை பஞ்சாங்கி தரும். பிற மலைத் தொடர்களை ஒப்பிடுகையில் இது மிகவும் தனித்துவம் வாய்ந்தவையாகவும் உள்ளது. மும்பையில் இருந்து பேருந்துகள் மற்றும் தனியார் வாடகைக் கார்கள் மூலம் எளிதில் பஞ்சாங்கியை அடையலாம்.

வில்சன் ஹில்ஸ்

குஜராத் எனற்லே வறட்சி மிகுந்த பகுதியாகத் தான் நமக்குத் தெரியும். இதற்குக் காரணம் ராஜஸ்தானுக்கு அருகில் இருப்பதாலேயே. ஆனால் குஜராத், அனைத்துவிதமாக தட்பவெட்ப நிலையையும் பெற்றிருக்கும் மாநிலமாகும். குஜராத்தின் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியில் இருக்கும் மலைப்பிரதேசம் தான் வில்சன் ஹில்ஸ். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்த மலைப்பகுதி புதுப் பொழிவுபெற்று பயணிகளை ஈர்க்கிறது. இந்த மலையில் ஒட்டுமொத்த அழகையும் கண்டு ரசிக்க ஏற்ற காட்சி முனைகள், ஆரேபிய கடலில் முழு பரபரப்பையும் காணும் வசதி, வியப்படையச் செய்யும் அருங்காட்சியங்கள் என வில்சன் மலைப்பிரதேசத்தில் பல விருந்துகளே உள்ளது.

கலிம்போங்

மிகவும் அமைதியும், ரம்மியமான சூழலும் கொண்ட மாசுபடாத மலைநகரம் தான் மேற்கு வங்கத்தில் உள்ள இந்த கலிம்போங். மலைக்கவைக்கும் காட்சி முனைகள், இதமான காலநிலை, டார்ஜிலிங் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு அருகில் இருப்பது என, கலிம்போங் பலவிதத்திலும் கண்டுகளிக்க ஏற்றது. அமைதியின் அடையாளமாக இருக்கும் கலிம்போங்கில், பாரா கிளைடிங் சாகசங்கள், பறவைப் பார்த்தல், மீன்பிடித்தல் போன்றவை தவிர்க்கக் கூடாத விஷயங்களாகும். சாங் டோக், பால்ரி போடாங், மேக் ஃபார்லென் சர்ச், சோங்கா கோம்பா, மோர்கன் ஹவுஸ், டாக்டர் கிரகாம் ஹோம்ஸ், ஹனுமன் கோவில், சயன்ஸ் சிட்டி, அருங்காட்சியங்கள், அழகிய கட்டிடங்கள் என சுற்றுலாத் தலங்கள் நிறைந்த கலிம்போங்கில் புத்தம் மதத்தை பின்பற்றுபவர்கள் அதிகம் வசிக்கிறார்கள். அதனாலேயே நமக்கு இப்பகுதி புதுமையாக தெரியும்.

காங்டாக்

கோடையின் கடுமைக்கு உடலுக்கும் மனதுக்கும் இதமளிக்கும் பல அம்சங்களைக் கொண்டது, சிக்கிம் மாநிலத்தின் தலைநகரான காங்டாக். வடகிழக்கு இந்தியாவில் கோடைக்காலத்தில் அதிகம் பேர் பயணிக்க விரும்பும் இடங்களில் ஒன்றாக காங்டாக் விளங்குகிறது. நிறைய சாகச விளையாட்டுகள், பொழுதுபோக்கு செயல்பாடுகள் என, நிச்சயம் உங்களை வசீகரிக்கும் இந்த காங்டாக். தீஸ்தா ஏரியில் ராப்டிங், சோம்கோ ஏரியில் படகுச் சவாரி, பாரா கிளைடிங் சாகசம், கேபிள் கார் பயணம் போன்றவை நீங்கள் இங்கு தவறவிடக்கூடாத விஷயங்கள் ஆகும்.Post Comment

Post Comment