காலா படம் எப்படி? - ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் :


Posted by-Kalki Teamபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ், ஹூமா குரேஷி, நானா படேகர் மற்றும் பலர் நடித்துள்ள காலா படம், இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. நேற்று இரவே அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இப்படத்தின் சிறப்புக் காட்சிகள் நடைபெற்றன.

ரஜினிகாந்த் ரசிகர்கள், படம் பார்த்த மற்ற ரசிகர்கள் தொடர்ந்து படம் பற்றிய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.அவர்களின் பொதுவான கருத்தாக காலா படத்தை ரஜினிகாந்த்தின் படம் என்று சொல்வதை விட பா.ரஞ்சித்தின் படம் என்று சொல்லலாம் என்ற கருத்தே அதிகமாக உள்ளது. வட இந்தியர்களை எதிர்க்கும் ஒரு தமிழனின் கதை என்று படத்தைப் பற்றி ஒரு வரியில் குறிப்பிடுகிறார்கள். அதிலும் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட கட்சியை அதிகம் தாக்குவது போன்று தான் படத்தில் பல காட்சிகள் உள்ளன என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.சென்டிமென்ட், நகைச்சுவை, ஆக்ஷ்ன், ரஜினியின் தனித்துவம் என படத்தைப் பார்க்க வைக்க பல அம்சங்கள் இருக்கிறதாம். ஒரு சிலர் பாட்ஷா படத்திற்குப் பிறகு இந்தப் படம் தான் ரஜினிகாந்த்தின் படங்களில் முக்கிய இடத்தை வகிக்கும் என்கிறார்கள்.மெதுவாக ஆரம்பமாகும் படம், இடைவேளைக்குப் பின் பரபரவென நகர்கிறது, ரஜினி ரசிகர்களை மட்டுமல்ல அனைத்து ரசிகர்களையும் கவரும் படமாக காலா இருக்கும் என்பதே பலரின் கருத்து.


Post Comment

Post Comment