வீட்டிலேயே செய்யலாம் சப்ஜா பலூடா :


Posted by-Kalki Teamகுழந்தைகளுக்கு பலூடா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சப்ஜா பலூடாவை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

சப்ஜா விதை - ஒரு ஸ்பூன்

பால் - ஒரு டம்ளர்

சேமியா - சிறிதளவு

ஐஸ்கிரீம் - 2 க்யூப்

பாதாம், வால்நட், முந்திரி - சிறிதளவு

ப்ரவுன் சுகர் - தேவையான அளவு

ஸ்ட்ராபெர்ரி, மாதுளை, நாவல்பழம் - சிறிதளவு.

செய்முறை :

சப்ஜா விதையை இரவே ஊற வைத்துக் கொள்ளவும். அது 3 அல்லது 4 ஸ்பூன் அளவிற்கு வந்து விடும்.

எல்லா பழத்தையும் தனித்தனியாக தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும்.

சேமியாவை வேகவைத்துக் கொள்ளவும். பலூடா கிளாஸில் சப்ஜா விதை ஒரு ஸ்பூன் போட்டு அதன் மேல் சிறிதளவு சேமியா சேர்க்கவும்.

ட்ரை ஃப்ரூட்ஸ் கொஞ்சம் போட்டு, மாதுளம் ஜூஸ் விட்டு அதன் மேல் ஐஸ்கிரீம் போட வேண்டும்.

மறுபடி சப்ஜா விதை ஒரு ஸ்பூன் போட்டு அதன் மேல் சிறிதளவு சேமியா சேர்க்கவும்.

ட்ரை ஃப்ரூட்ஸ் கொஞ்சம் போட்டு, நாவல்பழம் ஜூஸ் விட்டு மறுபடி சப்ஜா விதை ஒரு ஸ்பூன் போட்டு அதன் மேல் சிறிதளவு சேமியா சேர்க்கவும்.

ட்ரை ஃப்ரூட்ஸ் கொஞ்சம் போட்டு, ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் விட்டு அதன் மேல் ஜஸ்கிரீம் போட வேண்டும்.

அதன் மீது சர்க்கரை கலக்கிய பாலை விட்டு லேசாக கலந்துவிடவும்.

ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.

சூப்பரான சப்ஜா பலூடா ரெடி.


Post Comment

Post Comment