கொள்ளுத் தொக்கு


Posted by-Kalki Teamதேவை :

கொள்ளு - 1/4 கிலோ, தனியா - 2 டீஸ்பூன், சீரகம் - 2 டேபிள் ஸ்பூன், பூண்டு - 10 பல், வெங்காய வடகம், கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை, எண்ணெய், உப்பு, மஞ்சள்தூள் - தேவைக்கு.

செய்முறை:

முதல்நாள் இரவே ஊறவைத்த கொள்ளை குக்கரில் போட்டு ஒரு தம்ளர் தண்ணீர்விட்டு, உப்பு, தனியா, சீரகம், பூண்டு, மஞ்சள் தூள் போட்டு ஐந்து விசில் விட்டு எடுக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காய வடகம், கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை தாளித்து, கொள்ளைத் தண்ணீர் வடித்து போடவும். ஆறிய பின் மிக்ஸியில் ஒரு நிமிடம் சுற்றி எடுத்தால் கொள்ளுத் தொக்கு தயார்.

- ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்.Post Comment

Post Comment