அது வேற படம், கும்கி-2 கிடையாது - விஷ்ணு விஷால் :


Posted by-Kalki Teamபிரபு சாலமன் இயக்கத்தில் கும்கி-2 படத்தில் நடிப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ள விஷ்ணு விஷால், அவர் நடிக்கும் படம் குறித்த விளக்கத்தையும் அளித்துள்ளார்.

பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான படம் கும்கி. இதில் விக்ரம் பிரபு நாயகனாகவும், லட்சுமி மேனன் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். மேலும், தம்பி ராமையா, ஜோ மல்லூரி, அஸ்வின் ராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை பிரபு சாலன் உருவாக்கி வருகிறார்.

கும்கி-2 படத்தில் விஷ்ணு விஷால் நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியான நிலையில், விஷ்ணு விஷால் அதனை மறுத்துள்ளதுடன், அதற்கான விளக்கத்தையும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில் (நானும்) விஷ்ணு விஷால் - ராணா டகுபதி இணைந்து நடிக்கும் படத்தை பிரபு சாலமன் இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்த படம் இந்தியில் வெளியான `ஹாதி மெரே சாதி படத்தின் தழுவலாகும். ஆனால் அதன் ரீமேக் இல்லை.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட கேரளாவில் நடந்து முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இந்த படத்தின் மூலம் விஷ்ணு விஷால் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகிறார்.


Post Comment

Post Comment