ரூ.10,000 விலை குறைக்கப்பட்ட சோனி ஸ்மார்ட்போன் :


Posted by-Kalki Teamசோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைக்கப்பட்ட மாடல்களை தொடர்ந்து பார்ப்போம்.

சோனி நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன் மாடல்கள் விலை இந்தியாவில் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகமான எக்ஸ்பீரியா XZ பிரீமியம் ஸ்மார்ட்போன் விலையில் ரூ.10,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.49,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் சோனி எக்ஸ்பீரியா XZ பிரீமியம் மாடல் ரூ.59,990-க்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இதேபோன்று எக்ஸ்பீரியா XA1 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.5000 குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.29,990-க்கு அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்பீரியா XA1 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.2000 குறைக்கப்பட்டு ரூ.27,990-ககு விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் தற்சமயம் ரூ.5000 குறைக்கப்பட்டு ரூ.22,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்பீரியா XA1 பிளஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.5000 குறைக்கப்பட்டு ரூ.19,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் எக்ஸ்பீரியா XA1 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.24,990 விலைக்கு அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

சரியாக விற்பனையாகாத நிலையில், தயாரித்த ஸ்மார்ட்போன்களை விற்று தீர்க்க அதிரடி விலை குறைப்பை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சீன நிறுவனங்களை போன்று சோனியின் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள் நிலையான இடத்தை பிடிக்காத நிலையில் புதிய விலை குறைப்பு விற்பனையை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் சோனியின் எக்ஸ்பீரியா XZ2 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வரயிருக்கிறது. கடந்த மாதம் சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா XZ2 பிரீமியம் ஸ்மார்ட்போன். இது டூயல் பிரைிமரி கேமரா கொண்ட சோனியின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.


Post Comment

Post Comment