சத்து நிறைந்த கேழ்வரகு உப்பு உருண்டை:


Posted by-Kalki Teamஅதிகளவு சத்துக்கள் நிறைந்த கேழ்வரகை தினமும் சர்க்கரை நோயாளிகள் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகில் உப்பு உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு - 100 கிராம்,

உப்பு - தேவைக்கேற்ப,

சிறிது தண்ணீர்,

பெருங்காயம் - அரை டீஸ்பூன்,

கடுகு - கால் டீஸ்பூன்,

வெங்காயம் - 2,

பச்சை மிளகாய் - 2,

கறிவேப்பிலை - சிறிதளவு,

எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை :

வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

கடுகு, கறிவேப்பிலை, பச்சைமிளகாயை எண்ணெயில் விட்டு வதக்கி இறக்கும்போது பெருங்காயத்தூளைச் சேர்த்து செய்ய வேண்டும்.

ராகியுடன் உப்புத் தண்ணீர் கலந்து உதிரி போல் ஆக்கி ஆவிகட்டி கடாயிலிருந்து வதக்கி இறக்கிய பொருள்களோடு சேர்த்து கிளற வேண்டும்.

உருண்டை பிடிக்கும் அளவுக்கு வந்தவுடன அதை உருண்டையாக்கி `ஸ்ட்ரீம் குக் செய்ய வேண்டும்.

ராகி உப்பு உருண்டை தயார்.


Post Comment

Post Comment