குளு குளு கிவி ஐஸ்கிரீம் :


Posted by-Kalki Teamகோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று கிவி ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கிவி பழம் - 4

பைனாப்பிள் ஜூஸ் - 2 கப்

சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை :

3 கிவி பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு கூழாக்கி கொள்ளவும்.

1 கிவி பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

அரைத்த கிவி பழ விழுதை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் பைனாப்பிள் ஜூஸ், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

இந்த கலவையை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கைவிடாமல் கிளறி விடவும்.

திக்கான பதம் வந்தவுடன் இறக்கி ஆறவிடவும்.

நன்றாக ஆறியதும் அதில் நறுக்கி வைத்துள்ள கிவி பழத்துண்டுகளை போட்டு நன்றாக கலந்து சிறிய கப்புகளில் ஊற்றி குளிர் சாதன பெட்டியில் 5 மணிநேரம் வைத்திருந்து எடுத்து பரிமாறவும்.

சூப்பரான கிவி ஐஸ்கிரீம் ரெடி.


Post Comment

Post Comment