நாளை செம வெயிட்டு காட்ட வரும் ரஜினி ;


Posted by-Kalki Teamபா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தின் செம வெயிட்டு... என்ற முதல் சிங்கிள் பாடலை நாளை வெளியிட இருக்கிறார்கள்.

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் காலா. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

ஜூன் 7ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். மேலும் மே 9ம் தேதி இப்படத்தின் பாடல்களை வெளியிட இருப்பதாக தனுஷ் அறிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் செம வெயிட் என்ற சிங்கிள் பாடலை உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாளை மாலை 7 மணிக்கு வெளியிட இருப்பதாக தனுஷ் அறிவித்திருக்கிறார்.

மும்பையை பின்னணியாக கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்தில் நானா படேகர் அரசியல்வாதியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், வத்திகுச்சி திலீபன், ரமேஷ் திலக், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், சுகன்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


Post Comment

Post Comment